இதுக்கு எண்டே இல்லையா.. மீண்டும் களேபரமான டெல்லி மாநகராட்சி அவை கூட்டம்..மேயர் தேர்தல் ஒத்திவைப்பு
டெல்லி: டெல்லி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இன்றும் பாஜக - ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவையில் கடும் அமளி நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இன்றைய கூட்டத்திலும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறவில்லை.
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134-ஐ கைப்பற்றிய ஆம் ஆத்மி மாநகராட்சியை வசப்படுத்தியது.
டெல்லி மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களாக 10 பேரை, டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா நியமித்தார். இதற்கு ஆம் ஆத்மி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதமும் எழுதியிருந்தார்.

போர்க்களம் போல மாறியது
மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் மன்ற கூட்டம் தொடங்கியதும் ஆம் ஆத்மி, பாஜகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது. டெல்லி மாநகராட்சி மன்றமே போர்க்களம் போல மாறியது. இதனைத் தொடர்ந்து டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கடும் ஆட்சேபம்
இந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி மாநகராட்சி உறுப்பினர்களின் மன்ற கூட்டம் நடைபெற்றது. அவை கூடியதும் டெல்லி துணை நிலை ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் சத்ய ஷர்மா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்க இருந்தது. ஆனால், இதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலர் முகேஷ் கோயல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

பாஜக கவுன்சிலர்கள் போராட்டம்
நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்களிக்க தகுதி இல்லை என்று தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். நியமனம் செய்யப்பட்ட உறுப்பிப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு நடைபெறாமலே அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

அமளி ஏற்பட இதுவே காரணம்
பாஜக எம்.பி கவுதம் கம்பீரிடம் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் அதன் காரணமாகே பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் அமளி ஏற்பட இதுவே காரணம் என்று பாஜக கவுன்சிலர் ராஜ்பால் சிங் கூறினார். அதேவேளையில், மேயர் தேர்தல் இன்றே நடைபெற வேண்டும் என்று ஆம் ஆத்மி கவுன்சிலர் சவுரவ் பரத்வாஜ் கூறினார். மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விடும் என்று பாஜக அஞ்சுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications