கரண்ட்டும் இல்லை..தொடர்ந்து போராட்டம் செய்த மல்யுத்த வீராங்கனைகள்..டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள்/வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கடந்த மூன்று முறை WFI தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல, இவர் உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியாகவும் இருக்கிறார். இந்நிலையில் மல்யுத்த வீரர்களாக பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Electricity and water supply cut off in Jandar Mandar area of Delhi where wrestlers are protesting

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த மேரி கோம் தலைமையில் விசாரணை குழு ஒன்றை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் உருவாக்கியது. வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அரசியல் கட்சியினர் வந்தபோது வீரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

மத்திய அரசு அமைத்த விசாரணை குழு மீது அவர்கள் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர். எனவே தங்கள் போராட்டத்தையும் வாபஸ் வாங்கிக்கொண்டனர். ஆனால் குழு அமைத்து 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக எடுக்கப்படவில்லை. இதனையடுத்து நம்பிக்கையை இழந்த வீராங்கனைகள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 23ம் தேதி போராட்டத்தை தொடங்கிய வீரர்கள், பிரஜ் பூஷன் மீது டெல்லி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

புகாரில், ஒரு சிறுமி உட்பட 7 வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் புகார் அளித்து 3 நாட்கள் ஆன பின்னரும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே வீரர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து பிரச்னை பெரியதாக வெடித்தது. இதனையடுத்து நேற்று பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Electricity and water supply cut off in Jandar Mandar area of Delhi where wrestlers are protesting

வழக்குப்பதிவு செய்தவுடன் போராட்டத்தை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டல்கள் பல வருகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கூறியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற போவதில்லை என்று வீரர்கள் உறுதி தெரிவித்துள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு ஒலிம்பிக் தங்க மகன் அபிநவ் பிந்த்ரா, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், மாநிலங்களவை உறுப்பினரான பி.டி.உஷா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்தில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார். தங்களது புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தவுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் அதன் விளைவாகவே மின்சாரமும், தண்ணீரும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "காவல்துறையினர் எங்களுக்கு அழுத்தம் தருகின்றனர். இந்த சம்பவம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளதால்தான் காவல்துறையினர் இப்படி அழுத்தம் கொடுக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+