Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கே கத்த வேண்டாம்! நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? கோபப்பட்ட தலைமை நீதிபதி சந்திரசூட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்சிபிஏ தலைவர் ஆதிஷ் அகர்வாலா மற்றும் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆகியோரை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று கடுமையாக சாடினார்.

கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

Electrol Bond Case Do not shout at me says CJI DY Chandrachud to Nedumpara

இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.

இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.

எதிர்ப்பும் வழக்கும்: கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.

எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.

தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது. ஆனால் இதில் எஸ்பிஐ சீரியல் நம்பர்களை வெளியிடாமல் மறைத்தது.

மீண்டும் விசாரணை: இதையடுத்து உச்ச நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்து பாண்ட் பேப்பர்களில் சீரியல் நம்பர்களை வெளியிடும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் காட்டமாக கருத்துக்களை வைத்தார்.

அதில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை; அனைத்து தரவுகளையும் வெளியிட உத்தரவிட்டும் எஸ்.பி.ஐ. ஏன் எண்களை வெளியிடவில்லை?
அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது

முதல் உத்தரவில் அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று தெளிவாக உள்ளதே?; உத்தரவில் என்ன சந்தேகம் உள்ளது? நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?"

தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் SBI வெளியிட வேண்டும்.

சீரியல் எண்கள், ஆல்பா நியூமரிக் எண்கள் என தேர்தல் பத்திரம் தொடர்பான அத்தனை விவரங்களையும் வெளியிட வேண்டும் அதுவும் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் இந்த விவரங்களை sbi வங்கி வெளியிட வேண்டும், என்று காட்டமாக குறிப்பிட்டார்.

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்சிபிஏ தலைவர் ஆதிஷ் அகர்வாலா மற்றும் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆகியோரை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று கடுமையாக சாடினார். முறையாக மனு தாக்கல் செய்யாமல் நீதிமன்றத்தில் வாதத்தின் போது குறுக்கிட்டு கத்தியதற்காக இவரை கடுமையாக சாடினார் தலைமை நீதிபதி.

"என்கிட்ட கத்தாதீங்க!" என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழக்கறிஞர் நெடும்பாறையிடம் கோபமாக பேசினார். "நீதி செயல்பாட்டில் நீங்கள் பிரச்சனை செய்கிறீர்கள்!" என்றார் நீதிபதி பி.ஆர்.கவாய். இப்படியே பேசினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வழக்கறிஞர் நெடும்பாறையிடம் கோபமாக பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+