269 பேர் ஆதரவு.. 198 பேர் எதிர்ப்பு! ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்காக அமலான மின்னணு வாக்கெடுப்பு
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு 269 எம்பிக்கள் ஆதரவும், 198 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் சபையில் முதல் முதலாக மின்னணு முறையில் எம்பிக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதுபற்றிய விபரம் வருமாறு:
நம் நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை வெவ்வேறு காலக்கட்டத்தில் நடந்து வருகிறது. சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த தேர்தல் என்பது ஒன்றாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. அதன்படி இன்று லோக்சபாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டு வருவதற்கான சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். இந்த எதிர்ப்புக்கு நடுவே சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். அதன்பிறகு மசோதா மீது எதிர்க்கட்சியினர் பேசி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தினர்.
அதன்பிறகு சட்டமசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். பொதுவாக லோக்சபா, ராஜ்யசபாவில் ஒரு மசோதா என்பது வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தற்போது முதல் முறையாக மின்னணு முறையில் (E - Voting)வாக்கெடுப்பு என்பது நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்துவது இது முதல் முறையாகும்.
அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். அதன்படி எம்பிக்கள் தங்களின் இருக்கைகளில் அமர்ந்தபடியே அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த டிஸ்பிளேவின் பொத்தானை அழுத்தி வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
இந்த வாக்கெடுப்பில் Yes, No, Abstrain என்ற பொத்தான்கள் இருந்தது. ஆதரவு என்றால் Yes (பச்சை பொத்தான்), ஆதரவு இல்லை என்றால் No(சிவப்பு பொத்தான்), ஓட்டெடுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றால் Abstrain (மஞ்சள் நிற பொத்தான்) பொத்தானை அழுத்த அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பிறகு ஓட்டெடுப்பு தொடங்கியதற்கு அடையாளமாக சபாநாயகர் ஓம்பிர்லா பொத்தானை அழுத்தினார். அதன்பிறகு எம்பிக்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஓட்டளித்தனர். இந்த மின்னணு வாக்கெடுப்பு முறையில் மொத்தம் 369 பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.
மற்ற 92 எம்பிக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை. அதாவது மின்னணு இயந்திரத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மின்னணு முறையில் வாக்கு செலுத்திய 369 எம்பிக்களில் 220 பேர் ஆதரவும், 149 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதேபோல் வாக்கெடுப்பில் வாக்கை பதிவு செய்ய முடியாத 92 எம்பிக்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது. அந்த வாக்குச்சீட்டில் எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் சபையில் 3ல் 2 பங்கு ஆதரவு என்பது வேண்டும். அந்த வகையில் இன்று லோக்சபாவில் மொத்தம் 461 பேர் இருந்தனர். அப்படிப்பார்த்தால் 307 எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் இன்றைய வாக்கெடுப்பில் 269 எம்பிக்கள் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த மசோதவை நாடாளுமன்ற கூட்டு குழு விவாதத்துக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்பி டிஆர் பாலு கூறியிருந்தார். அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதி செய்துள்ளார். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவில் விவாதத்துக்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி விரைவில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் முன்பு விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications