இந்தாம்மா.. பேசிக்கிட்டு இருக்கும் போதே என்ன பன்ற.. யானைக்கு வந்ததே கோபம்.. வீடியோவை பாருங்க
டெல்லி: சுற்றி உள்ள எல்லோரும் தன்னை கொஞ்சும் போது, ஒரு பெண் மட்டும் தன்னை போட்டோ எடுப்பதை பார்த்த யானை ஒன்று கோபப்பட்டு தாக்கிவிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவி வருகிறது.
யானைகள் பொதுவாக மனிதர்களைவிடவும் அதிக பாசம் கொண்டவை. அதேநேரம் மதம் பிடித்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும். யானை தன் குட்டிக்காக எந்த எல்லைக்கும் போகும். அதனை பல வீடியோக்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

யானைகள் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நினைத்தால், போகும் வழியில் யாரை கண்டாலும் தாக்கும். குறிப்பாக ஒற்றை காட்டு யானைகள் தனியாக செல்பவர்களை தாக்கிவிடும். கோயில்கள் மற்றும் பூங்காக்களில் பராமரிக்கப்படும் யானைகள் அங்குள்ள பாகன்களின் சொல்பேச்சு கேட்டு மனிதர்களை தாக்காமல் அமைதியாக வாழ்பவவை. தன்னை நெருங்கி வருபவர்களிடம் சந்தோஷமாக விளையாடவும் செய்யும். சில சமயம் அந்த விளையாட்டு சேட்டையாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. தன்னை நெருங்கி வந்து விளையாட விரும்புபவர்களிடம் யானை அவ்வப்போது குறும்பும் செய்யும். அப்படி ஒரு வீடியோவை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம்.
ஒரு யானை பூங்காவில் ஒன்றில் பராமரிக்கப்படுகிறது அந்த யானையை இரண்டு பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் சிலர் அருகில் சென்று பார்க்கிறார்கள். அப்போது யானை அவர்களிடம் கைகுலுக்குகிறது. அவர்களுடன் விளையாடிக்கொண்டும் இருக்கிறது. அப்போது ஒரு பெண் சுற்றுலா பயணி திடீரென யானையை தனது செல்போனில் படம் பிடிப்பதை பார்த்து கோபம் அடைந்தது.
திடீரென அந்த பெண்ணின் முகத்தில் தாக்கி செல்போனை தட்டிவிட்டது யானை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கேட்காம கொள்ளாம.. எப்படி என்னைய போட்டோ எடுக்கலாம், என்னிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் போட்டோவே நீ எடுத்திருக்கனும் என்று மனதில் நினைத்திருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள். யாரு இவரு , போட்டோ எடுத்ததுக்கு போய்.. இவ்வளவு கோபப்படுறாரு என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
— NO CONTEXT HUMANS 👤 (@HumansNoContext) June 5, 2023
=யானைகளை பற்றி இந்த செய்தியிலேயே சில முக்கியமான விஷயங்களை பார்த்துவிடுவோம். உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஆசிய யானைகள்; ஆஃப்ரிக்க யானைகள் என இரண்டு வகையை சேர்ந்தவை தான் ஆகும். பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமம் ஆகும்.
நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை ஆகும். யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் என்றால் தேனீக்கள் தான். யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும். யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன.












Click it and Unblock the Notifications