அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை? விட்டு விளாசிய தலைமை நீதிபதி.. திமுகவிற்கு 6 குட் நியூஸ்
டெல்லி: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு ஆளும் திமுக தரப்பிற்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது
தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது; வரம்பு மீறி நடக்கிறது
முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில், அதிகாரிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை?
தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
ஏன் இந்த கேள்வி?
இந்த கேள்விக்கு பின் காரணங்கள் உள்ளன, அமலாக்கத்துறை அதிகாரிகள், டாஸ்மாக் புகாரில் சிக்கி உள்ளவர்கள் வீடுகள் மட்டுமன்றி டாஸ்மாக் அலுவலகத்திலும் ரெய்டுகளை செய்தனர்.
உதாரணமாக டாஸ்மாக் அலுவலகத்தில் எத்தனை மது பாட்டில்கள் உள்ளன, அதில் இருக்கும் க்யூ ஆர் கோடு, பார் கோடு ஆகியவை எப்போது தயாரிக்கப்பட்டது, எத்தனை பார் கோடு தயாரிக்கப்பட்டு, எத்தனை பயன்படுத்தப்பட்டது, எத்தனை பயன்படுத்தப்படவில்லை, பார் கோடு இல்லாமல் திருட்டுத்தனமாக விற்கப்பட்டது எத்தனை என்றெல்லாம் அமலாக்கத்துறை விசாரணை செய்தது.
இதற்காக சிசிடிவி கேமராக்கள், டாஸ்மாக் கடைகளில் மின்சாரம் எத்தனை நேரம் எரிந்தது என்பதற்கான பில்லை வைத்து அது இயங்கிய நேரத்தை கூட கணக்கிட முயன்றது அமலாக்கத்துறை. இதை எல்லாம்தான் உச்ச நீதிமன்றம் இப்போது கண்டித்து, தடை விதித்து உள்ளது.
திமுகவிற்கு சாதகம்
இந்த உத்தரவு ஆளும் திமுக தரப்பிற்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது
1. இதனால் இனி டாஸ்மாக் அலுவலகங்களில் ரெய்டுகளை நடத்த முடியாது.
2. ஏற்கனவே அங்கே செய்யப்பட்ட ரெய்டுகள் மூலம் கிடைத்த ஆவணங்கள் கோர்ட்டில் செல்லாது. வேண்டுமானால் அமலாக்கத்துறை அதை வைத்து நூல் பிடித்து விசாரணைக்கு செல்லும். ஆனால் ரெய்டு ஆவணங்கள் கோர்ட்டில் செல்லாது.
3. அதிகாரிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை? என்று கேட்டுள்ளனர். இதனால் அமலாக்கத்துறை பவரே இங்கே கேள்விகுறியாகி உள்ளது.
4. அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் அவர்களே நடவடிக்கை எடுக்கட்டும் நீங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அமலாக்கத்துறைக்கு கடிவாளம் போடப்பட்டு உள்ளது.
5. எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று கேள்வி கேட்டுள்ளது. ஏனென்றால் டாஸ்மாக் தொடர்பாக 52 எப்ஐஆர் உள்ளன. இதில் பல அதிமுக மாஜிக்களுக்கு எதிரான எப்ஐஆர் இதில் எது என்று அமலாக்கத்துறை கூறினால் அது திமுகவிற்கு மட்டுமல்ல.. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சிக்கல். அதனால் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
6. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது என்று அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அமலாக்கத்துறைக்கு கிட்டத்தட்ட கடிவாளம் போடப்பட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications