பிஎஃப் பணத்தை எடுக்க இனி நோ வெயிட்டிங்! நம்ம பணத்தை எப்போ வேணும்னாலும் எடுக்கலாம்.. வருது EPFO 3.0
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO) விரைவில் EPFO 3.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம்கள் மூலமே எடுத்துக் கொள்ள முடியும் என்ற தகவலை பகிர்ந்து இருக்கிறார் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
இபிஎஃப்ஓ என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறது. மேலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் செலுத்துகின்றன.

இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும் இபிஎஃப்ஓ பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது நெட் பேங்கிங் மூலமாக தான் பணத்தை எடுக்க முடியும். அதாவது தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்கை இணைத்து, அதன் மூலம் அப்ளை செய்தால் மிகப்பெரிய பிராசஸ்க்கு பிறகு அந்த பணம் தங்கள் வங்கி கணக்குக்கு வரும். அதற்கு 10 முதல் சில மாதங்கள் வரை கூட ஆகலாம். இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை தந்திருக்கிறது மத்திய அரசு.
இனி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் தொழிலாளர்கள் தங்கள் வைப்பு நிதியை ஏடிஎம்கள் மூலமே எடுத்துக் கொள்ள முடியும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் தெலுங்கானா மண்டல அலுவலகம் மற்றும் ஹைதராபாத் அலுவலகத்தை இன்று அவர் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர்," இனிவரும் நாட்களில் இபிஎப்ஓ 3.0 அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் இபிஎப்ஓவை ஒரு வங்கி போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். டெபிட் கார்ட், யுபிஐ மூலம் தங்களது பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இபிஎப்ஓ சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் (யுனிவர்சல் அக்கவுண்ட்) நம்பரை வங்கி கணக்கு எண் போலவும் பயன்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தொழிலாளர்கள் சிரமமின்றி தங்களது பிஎஃப் நிதியை அவசர தேவைக்காக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎப்ஒ 3.0: இபிஎப்ஓ 3.4 மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அடுத்த கட்டமாக நவீனப்படுத்தப்பட இருக்கிறது. இது தொழிலாளர்களின் பிஎஃப் அனுபவத்தை மேம்படுத்துவதோடு ஏற்கனவே இருக்கும் நடைமுறை சிக்கல்களை நீக்குகிறது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி எடுப்பதற்கு அரசு அலுவலகங்களுக்கோ வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கோ செல்லத் தேவையில்லை. வீட்டிலிருந்தே யுபிஐ மூலமோ அல்லது ஏடிஎம் மூலமோ தங்களது யுஏஎன் எண்ணை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம்.
இதன் முக்கிய நோக்கம் உறுப்பினர்கள் அவர்களது நிதியை விரைந்து எடுக்கவும் அதற்கான நடைமுறைகளை எளிமை ஆக்குவதும் தான். தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நீண்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவர்கள் தங்களது நிதியை எடுக்க முடியும். ஆனால் இந்த புதிய மாற்றத்தின் மூலம் நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு பணப்பரிமாற்றம், ஓய்வூதியத்தை திரும்ப பெறுதல், பணம் எடுத்தல் ஆகியவை எளிமையாக்கப்பட இருக்கிறது. epfo 3.0 செயலி வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்கள் கையாளுவதற்கு மிக எளிமையானதாக மாறும் என மத்திய அரசு கூறியுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications