வேலை இழந்த தொழிலாளர்களே.. 3 மாத சம்பளம் தருகிறது மத்திய அரசு.. அதை வாங்க என்ன தகுதி!
டெல்லி: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களே.. உங்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு இருந்தால் 3 மாதங்களுக்கு 50 சதவீதம் சம்பளம் தரலாம் என விதிகளை தளர்த்தி உள்ளது. இதற்கு என்ன தகுதி என்பதை இப்போது பார்க்கலாம்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு லாக்டவுன் அறிவித்தது. இந்த ஊரடங்கு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அரசு தளர்வுகள் அளித்து பல துறைகளை மீண்டும் இயங்க வைத்தாலும், முழு ஊரடங்கு முடிவுக்கு வராததால் இன்னும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது.

வேலையில்லாமல் தவிப்பு
சுற்றுலா, ஓட்டல், ஜவுளி தொழில் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து . மாத வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்துவதில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எப்போது இயல்பு நிலைக்கு தொழில்கள் வரும் என்றே தெரியாத நிலை உள்ளது.

மூன்று மாத சம்பளம்
இந்நிலையில், தொழிலாளர்கள் இஎஸ்ஐ காப்பீடு கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தால் அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவீத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. இதற்காக, ‘வேலையின்மை படி'க்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

90 நாட்கள் வேலையின்மை படி
மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24 முதல், 3 மாதங்களுக்கு (90 நாட்களுக்கு) வேலையின்மை படியை பெறுவதற்கு, இஎஸ்ஐ கார்டு வைத்துள்ள ஊழியர்கள் பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். மத்திய அரசின் இந்த நல்ல அறிவிப்பால் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

50 சதவீதம் சம்பளம் பெற தகுதி
தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான 2 ஆண்டுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். 2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 78 நாட்களுக்கு குறையாமல் இஎஸ்ஐயில் பங்களித்திருக்க வேண்டும். 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மீதமுள்ள 6 மாத பங்களிப்பு காலங்களில் குறைந்தபட்சம், 78 நாட்களுக்கான பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது
இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் நிறுவனத்தில் இதற்கான உரிமைகோரலுக்குப் பதிலாக, நேரடியாக உரிமைகோரலை ESIC கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் பணம் நேரடியாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இஎஸ்ஐ திட்டத்தில் சேர்வதற்கு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ .21,000 வரை இருந்தால் மட்டுமே தகுதியாக உள்ளது.. எனவே வேலையின்மை திட்டத்தின் கீழ் அவர்களுக்கு அதிகபட்சம் ஒருவருக்கு ரூ .31,500 வரை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications