சிக்ஸ் பேக் அழகனுக்கு நோ சொல்லும் பெண்கள்.. அமுல் பேபி ஆண்களை திருமணம் செய்ய போட்டா போட்டி! வினோதம்
டெல்லி: லேசான தொப்பை இருந்தாலே ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு நிராகரிக்கும் இந்த சூழலில் தொப்பை இருந்தால்தான் திருமணம் என்ற ஒரு வினோத நிகழ்வு நடக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
திருமணத்திற்கு தற்போது பெண்கள் கல்லூரி படிப்பில் இறுதியாண்டு படிக்கும் போதே சில பெற்றோர் மேட்ரிமோனியில் பதிவு செய்து விடுகிறார்கள். சிலர் பெண் சம்பாதித்து வேலைக்கு சென்றவுடன் பதிவு செய்கிறார்கள்.

அது போல் ஆணை பெற்றவர்களும் தங்கள் மகன், குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு சம்பாதித்தால் உடனே மேட்ரிமோனியில் பதிவு செய்து வரன்களை தேடி வருகிறார்கள். அப்படி தேடினால்தான் தங்களுக்கு பிடித்த வரன் ஒரு 5 ஆண்டுகளிலாவது கிடைக்கிறது.
ஒவ்வொரு சமூகத்தினரின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப வரதட்சிணை உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன. அதில் இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டவுடன் மேற்கொண்டு நிச்சயம், திருமணம் என நடக்கிறது. இதிலும் பெண்களின் கண்டிஷன்- கை நிறைய சம்பாதிக்கணும், அரசு வேலை, டாக்டர், என்ஜீனியர், சொந்த வீடு, மணமகனின் பெயரில் எந்த கடனும் இல்லாமல் இருத்தல், கார், பைக், தனி குடித்தனம் இவை டிமாண்ட்டாக வைக்கப்படுகிறது.
அது போல் மாப்பிள்ளை வீட்டில்- பெண் படித்திருக்கணும், இத்தனை சவரன் நகை, வெள்ளி பாத்திரங்கள், பேங்கில் சில லட்சம் டெபாசிட், பெண்ணின் சம்பள பணத்தை கணவரிடம்தான் கொடுக்க வேண்டும், பெற்றோருக்கு அனுப்ப கூடாது இப்படியான கண்டிஷன்கள் போடப்படுகிறது. இதில் பரஸ்பரம் இருவரும் பேசி முடிவு எடுத்துக் கொள்கிறார்கள்.

நிராகரிப்பு என வரும் போது பெண் குண்டாக இருந்தாலோ, நிறம் குறைந்திருந்தாலோ, குள்ளமாகவோ நெட்டையாகவோ இருந்தாலோ, ஐடி கம்பெனியில் பணிபுரியாமல் இருந்தாலோ ஆண் நிராகரிக்கிறார். பெண்கள், நிறத்தை பார்ப்பதுடன் தொப்பை இருக்கிறதா என பார்க்கிறார்கள், நுனி நாக்கில் ஆங்கிலம் வருகிறதா, தலையில் உண்மையான முடி அதுவும் எந்த டையும் இல்லாமல் கருகரு என இருக்கிறதா என்பதையும் பார்க்கிறார்கள்.
இதில் ஏதாவது இருந்தால் ரிஜெக்ஷன்தான். இப்படியெல்லாம் பார்த்து பார்த்து திருமணம் செய்து பலர் சந்தோஷமாக வாழ்கிறார்கள், சிலர் வாழ்க்கையை வாழ தெரியாமல் முன் கோபம், ஈகோவால் கோர்ட்டுக்கு செல்கிறார்கள். லேசாக தொப்பை வெளியில் எட்டி பார்த்தாலே ஆண்களை வேண்டாம் என பெண்கள் சொல்லும் நிலையில் தொப்பை யாருக்கு பெரிதாக இருக்கிறதோ அவர்களுடன்தான் திருமணம் என்ற ஒரு வினோதமான நிகழ்வு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம்! அது எத்தியோபியாவில்தான்! இங்கு ஓமோ பள்ளத்தாக்கில் வசிக்கும் போடி பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத திருவிழாவை நடத்துகிறார்கள். இதற்காக ஒரு போட்டியை நடத்தி யார் அதிக குண்டாக இருக்கிறார்களோ யாருக்கு பெரிய தொப்பை இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்த திருவிழா கேல் திருவிழா என அழைக்கப்படுகிறது.
இந்த பழங்குடியினர் உணவை வேட்டையாடுபவர்கள், இதனால் இவர்களின் உடலில் கொழுப்புகள் அதிகமாக சேரவே சேராது. எனவே இந்த திருவிழாவுக்கு 6 மாதத்திற்கு முன்னரே தாங்கள் உடல் எடையை அதிகரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதற்காக அவர்கள் என்ன மாதிரியான உணவை எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?
பசுவின் பால் கலந்த ரத்தம்தான். தினமும் குறிப்பிட்ட அளவு பசுவின் ரத்தம் உணவாக கொடுக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு இவர்களுக்கு இந்த ரத்தத்தை தவிர வேற உணவு கிடையாது. போட்டியில் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுவிட்டால் அடுத்த முறை போட்டி நடத்தும் வரை அவர்தான் அந்த கூட்டத்தின் ஹீரோவாக கருதப்படுகிறார். இவரை திருமணம் செய்து கொள்ள அந்த பழங்குடியின பெண்கள் நீ, நான் என போட்டி போட்டு கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்களாம்!
போடி இன மக்கள் பசுக்களை புனிதமாக கருதுகிறார்கள். எனவே அவற்றை கொன்று ரத்தத்தை எடுக்க மாட்டார்கள், அதன் நரம்பில் கத்தியால் கிழித்து ரத்தத்தை எடுத்து கொண்டு பின்னர் களிமண்ணால் மூடிவிடுகிறார்கள். ஆண்டுதோறும் இந்த திருவிழா ஜூன் மாதம் தொடங்கும். இந்த திருவிழாவில் போட்டியிடும் நபர்கள், தங்கள் குடில்களுக்கு திரும்ப வேண்டும், அங்கிருந்து வேறு எங்கும் நகரவே கூடாதாம். யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ள கூடாதாம். தினமும் தனது உடலை பருமனாக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட வேண்டுமாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications