Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 வயதை தாண்டிய.. அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1000... டெல்லி ஆம் ஆத்மி அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டைப் போலவே டெல்லியிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் முக்யா மந்திரி மகிளா சம்மன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு முதல் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது.

Every woman above 18 years will be given Rs 1 000 every month says Delhi Finance Minister Atishi

இத்திட்டத்திற்குத் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மாதம் ரூ.1000 ரூபாய் என்பது ஏழை மக்களுக்குப் பெரியளவில் உதவுவதாகவே இருக்கிறது. மாதாமாதம் நேரடியாக இந்த உதவித்தொகை பெண்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி அரசு: அதேபோன்ற ஒரு திட்டத்தை இப்போது டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. கடந்த 2021 தேர்தல் சமயத்திலேயே டெல்லி ஆம் ஆத்மி அரசு மகளிருக்கு ரூ.1000 திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. இதற்கிடையே இப்போது இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு டெல்லி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 76,000 கோடி செலவில் டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது ஆம் ஆத்மி அரசு டெல்லியில் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் ஆகும். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இதில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல பெண்களை கவரும் வதையில் மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இதில் இடம்பெற்று இருந்தது.

மகளிருக்கு ரூ.1000: ராமராஜ்யத்தின் தர்மத்தை அரசு கொண்டு வர முயல்வதாக டெல்லி நிதியமைச்சர் கூறினார். அப்போது தான் முக்யா மந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதாமாதம் ரூ.1000 வங்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அவர் அறிவித்தார்.

டெல்லி சட்டசபையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அப்போது அவர் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் என அறிவித்தார். முக்யா மந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேலான அனைத்து பெண்களுக்கும் டெல்லி அரசு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் என்று அவர் அறிவித்தார்.

சில கட்டுப்பாடுகள்: இதில் வெகு சில கட்டுப்பாடுகளை மட்டுமே டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறப் பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், டெல்லி வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. அவர்கள் வேறு எந்தவொரு ஓய்வூதியத் திட்டத்தின் உதவித் தொகைகளைப் பெறக்கூடாது. மேலும், அரசு ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் பணத்தைப் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்த அறிவிப்பை டெல்லி அரசு இப்போது வெளியிட்டுள்ள நிலையில், அறிவிப்புடன் நிற்காமல் வெகு விரைவில் இதை அமல்படுத்தவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இத்திட்டத்தை டெல்லி அரசு அமல்படுத்தும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+