மத்திய அமைச்சரானார் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ் ஜெய்சங்கர்
Recommended Video
டெல்லி: முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ் ஜெயசங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று இரவு 7 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. முதலில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் எஸ் ஜெய்சங்கருக்கு (64) மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டதை அடுத்து அவர் பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்கா, சீனா, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராகவும் இருந்த இவர் கடந்த ஜனவரி 2015-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ஆம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை செயலாளராக ஓய்வு பெற்றார். இந்த காலகட்டத்தில் இந்தியா- சீனா இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லை பகுதியான டோக்லாம் பகுதியில் சீன நாட்டு ராணுவம் ஊடுருவிய போது அந்த பிரச்சினையை திறமையாக கையாண்டு முடித்து வைத்தார்.
1977-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறையில் பணியாற்றி வரும் நிலையில் இவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது இந்தியா- அமெரிக்கா இடையான அணுவாற்றல் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் பேரம் பேசியதில் முக்கிய பங்கு வகித்தார்.
தனது ஓய்வுக்கு பிறகு, இவர் டாடா சன்ஸ் குளோபல் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications