"இந்தியா தான் பெஸ்ட்.." அடித்து சொன்ன அமெரிக்க விமானப்படை வீரர்.. பாகிஸ்தான் நிலைமை மோசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எல்லையில் இரு தரப்பு வீரர்களும் ஹை அலர்ட் மோடில் இருக்கிறார்கள். இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப் படைகளில் எது சிறந்தது என்பது குறித்த கேள்விக்கு முன்னாள் அமெரிக்கப் படை விமானி வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார். அவரது பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. சுமார் 100 தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டனர். இதைப் பொறுக்க முடியாத பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயல்கிறது.

Ex-US Air Force Pilot Backs India Amid raising Tensions with Pakistan

காஷ்மீர்

நேற்று காஷ்மீர் உட்பட எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனால் நமது நாட்டில் எங்கும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க இணையத்தில் பலரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையை ஒப்பிட்டு பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானி ஒருவர் இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இவர் அமெரிக்க விமானப்படையில் இருந்த போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டின் பைலட்களுடன் தனித்தனியாகப் பயிற்சிகளின்போது இணைந்து பணியாற்றி இருக்கிறாராம். இதற்கிடையே இரு தரப்பைப் பார்த்தால் இந்தியாவே பெஸ்ட் என்பது போல அவர் கருத்து கூறியிருக்கிறார்.

இந்தியா தான்

ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை விமானியும், A-10 தண்டர்போல்ட் II விமானியுமான டேல் ஸ்டார்க்ஸ் இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா அல்லது பாகிஸ்தான் என இரு விமானப் படைகளில் எது சிறந்தது என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "எனது பணியில் இருந்தபோது இந்திய மற்றும் பாகிஸ்தான் போர் விமானிகளுடன் பறந்துள்ளேன். அதை வைத்துச் சொல்கிறேன் நான் இந்தியாவே பெஸ்ட் என நினைக்கிறேன்" என்றார். மேலும், இந்திய இராணுவம் மிகவும் சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நெட்டிசன்கள்

அதற்குப் பதிலளித்து நெட்டிசன், "இந்திய விமானிகள் தலைசிறந்தவர்கள். என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.. இந்திய விமானப்படை விமானிகளுக்கு எந்தவொரு தனிப்பட்ட விருப்ப வெறுப்பு இல்லை.. அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் தேவையான வசதிகள் நம்மிடம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு நபர், உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று இந்திய ராணுவம் என்பதில் சந்தேகம் இல்லை எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய விமானப்படை

உலகின் மிகப் பெரிய விமானப்படைகளில் ஒன்று இந்திய விமானப்படை.. நமது விமானப்படையில் பைலட்கள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்படச் சுமார் 1.50 லட்சம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளார். விமானப்படையில் இப்போது 31 போர் படைப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு படைப்பிரிவிலும் 16-18 விமானங்கள் இருக்கும். குறிப்பாக அதிநவீன ரஃபேல் விமானங்கள் 2 படைப்பிரிவுகளில் உள்ளன. இது தவிர சுகோய், மிக்-29, மிராஜ் 2000, தேஜாஸ், ஜாகுவார் உட்பட பல்வேறு அதிநவீனப் போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+