"கருணாநிதி".. ஹேப்பி கிளாஸில் அப்படியே அசந்துட்டேன்.. டெல்லியில் பூரித்து போன முதல்வர் ஸ்டாலின்
கருணாநிதி ஓவியத்தை பள்ளி ஆசிரியை முதல்வருக்கு வழங்கினார்
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. 2வது நாளான இன்று மேற்கு டெல்லி, வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார்.
பள்ளியை பார்வையிட வந்த ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றார்.. அந்தப் பள்ளி மாணவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.

ஹேப்பி கிளாஸ்
இதற்கு பிறகு, அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏசி கிளாஸ் ரூம்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் ஸ்டாலினுக்கு, கெஜ்ரிவால் விளக்கமாக சொன்னார்.. அந்த பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள ரூமில் "மாதிரி பள்ளி" தொடர்பான வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது...

மகிழ்ச்சி வகுப்பு
அதேபோல, மகிழ்ச்சி வகுப்பு என்று சொல்லப்படும் ஹேப்பி கிளாஸ் என்றால் என்ன என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.. டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை இந்த மகிழ்ச்சி வகுப்புகள் எடுக்கப்படும்.. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு அன்றைய தினம் புத்தகமே கொண்டு வர மாட்டார்கள்.. இந்த ஒரு நாளில், மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.. இதுதான் அந்த ஹேப்பி கிளாஸ்..அதேபோல, மகிழ்ச்சி வகுப்பு என்று சொல்லப்படும் ஹேப்பி கிளாஸ் என்றால் என்ன என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.. டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை இந்த மகிழ்ச்சி வகுப்புகள் எடுக்கப்படும.. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு அன்றைய தினம் புத்தகமே கொண்டு வர மாட்டார்கள்.. இந்த ஒரு நாளில், மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.. இதுதான் அந்த ஹேப்பி கிளாஸ்..

ஹேப்பி கிளாஸ்
இதை பற்றிதான் முதல்வர் கெஜ்ரிவாலிடம் கேட்டறிந்தார்.. பிறகு பள்ளி மாணவ, மாணவர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார்.. இந்த பள்ளி நம் முதல்வருக்கு பிடித்து விட்டது போலும்... செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் உள்ள மாதிரி பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோலவே ஒரு பள்ளியை தமிழ்நாட்டில் கூடிய சீக்கிரம் நாங்களும் உருவாக்கப் போகிறோம்.. அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது...

நெகிழ்ந்தேன்
அந்த பணிகள் முடிந்து, பள்ளியை திறக்கிற நேரத்தில் கண்டிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைப்போம்.. அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று நெகிழ்ந்து சொன்னார். அதுமட்டுமல்ல, இந்த பள்ளியில் உள்ளே நுழையும்போது மாணவிகள் தந்த வரவேற்பு முதல் ஒவ்வொரு நிகழ்வையும் தன்னுடைய ட்வீட்டிலும் முதல்வர் பகிர்ந்துள்ளார்.. அந்த வகையில் ஸ்டாலின் பதிவிட்டதாவது:
Recommended Video

கருணாநிதி
"டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் #BusinessBlasters முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்" என்று பதிவிட்டுள்ளார். ஆசிரியை தந்த கருணாநிதியின் அந்த ஓவியத்தையும் ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications