ரூ. 2000 நோட்டுகளை நக்சல்கள், பயங்கரவாதிகள் தடையின்றி மாற்றுகின்றனர்- உச்சநீதிமன்றத்தில் ஷாக் தகவல்
டெல்லி: ரூ. 2,000 நோட்டுகளை மாவோயிஸ்டுகள் (நக்சல்கள்), பயங்கரவாதிகள் தடையின்றி மாற்றி வருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை என்பதும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் ரூ.2,000 நோட்டு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் ஆய்வு செய்யக் கூடிய மேல்முறையீட்டு ஆணையம் அல்ல நீதிமன்றம் என கூறி அஸ்வினிகுமார் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
இதனைத் தொடர்ந்து அஸ்வினி குமார் உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனு, நீதிபதிகள் சுதான்ஷூ துலியா, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தின் அனிருதா போஸ், ராஜேஷ் பிண்டல் பெஞ்ச் முன்பாக மீண்டும் அஸ்வினி உபாத்யாய ஆஜராகி தமது மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே ஒரு பெஞ்ச்சில் தாக்கல் செய்த மனுவை மீண்டும் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அஸ்வினி குமார் உபாத்யாய, ரூ. 2,000 நோட்டுகளை மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் தடையின்றி மாற்றி வருகின்றனர். இதுவரை ரூ. 80,000 கோடி அளவுக்கு ரூ. 2,000 நோட்டுகள் மாற்றப்பட்டுவிட்டன. ஆகையால்தான் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications