ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றி உறுதியா? 'எக்சிட் போல்' முடிவு எதை காட்டுகிறது?
டெல்லி: கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் கருத்துக் கணிப்புகள் எப்போதுமே அப்படியே சரியாக அமைந்தது. 2024 லோக்சபா தேர்தலில் கணித்தபடி பாஜக முழுமெஜாரிட்டி பெறவில்லை.. அந்த வகையில் கணிப்புகள் சரியாக இருக்குமா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு 44-54 இடங்கள் கிடைக்கும் என்று டைனிக் பாஸ்கர் கணித்துள்ளது. அப்படி மட்டும் நடந்தால், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அதுமட்டுமின்றி, கடந்த முறை காங்கிரஸ் 31 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது.. டைனிக் பாஸ்கர் தனது கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 15-29 இடங்களையே வெல்லும் என்று கூறியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் 40 இடங்களில் வென்ற நிலையில், 15 முதல் 29 இடங்களுக்குள் சுருங்கினால் அது, மோடி தலைமையிலான பாஜகவுக்கு மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே மற்றொரு கருத்துக்கணிப்பான துருவ் ரிசர்ச், காங்கிரசுக்கு 50 முதல் 60 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது. 46 இடங்களில் வென்றாலே மெஜாரிட்டி என்கிற நிலையில், 60 என்பது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். அதேநேரம் துருவ் ரிசர்ச் பாஜகவுக்கு 22-32 இடங்கள் மட்டுமே பெறும் என்று கூறியுள்ளது. மற்றொரு கருத்துக்கணிப்பு, ரிபப்ளிக் பாரத்-மேட்ரைஸ் காங்கிரஸுக்கு 55-62 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.அதே நேரத்தில் பாஜகவுக்கு 18-24 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் ஒப்பிட்டு பார்த்தால், காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் 90 இடங்களில் காங்கிரஸ் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக 18-29 இடங்களைப் பெறும் என்றே கூறியிருக்கின்றன.
ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகள் இல்லை என்று கூறி வரும் பாஜகவுக்கு இந்த முடிவுகள் நிச்சயம் கடும் அதிர்ச்சி அளிக்கும் என்பது உறுதி. பாஜக 10 வருடம் ஆட்சியில் இருந்த காரணத்தால் மக்களிடையே இயல்பாக எழும் அதிருப்தி அலை மற்றும் கூட்டணி கட்சிளுக்காக செய்து கொண்ட சமரசம், ஆட்சியை தக்க வைக்க மேற்கொண்ட சமரசம் என எல்லாமே இந்த தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொல்வது என்றால், விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, அக்னிபத் திட்டம், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் பாஜகவிற்கு பாதமாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளிலுமே தேர்தலுக்கு முன்பு அதிருப்தி ஏற்பட்டது என்றாலும், பாஜகவில் மிக அதிகமாக வெளிப்பட்டது. முதல்வர் நயாப் சிங் சைனிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்ட 8 பேரை கட்சியில் இருந்து பாஜக அதிரடியாக நீக்கியது. காங்கிரஸிலும் சிக்கல் இருந்தது. சுயேட்சை வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததற்காக 13 தலைவர்களை காங்கிரஸ் கட்சி நீக்கியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications