ஆஹா.. அற்புதம்.. வெறும் 90 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை.. முகக் கவசத்தில் வடிவமைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெறும் 90 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருப்பதை கண்டறியும் வகையிலான புதிய தொழில்நுட்பம் கொண்ட முகக் கவசத்தை ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இந்த டெக்னாலஜி மூலம் மற்ற வைரஸ்களையும் வருங்காலத்தில் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸால் அவதிப்படுகிறார்கள்.

10 முதல் 12 மணி நேரம்

10 முதல் 12 மணி நேரம்

சீனாவிலிருந்து பரவிய இந்த உயிர்க் கொல்லி வைரஸால் நிறைய பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய சளி மாதிரி சேகரிக்கப்பட்டு இந்த முடிவுகள் வர கிட்டதட்ட 10 முதல் 12 மணி நேரம் .. சில நேரங்களில் ஒரு நாள் கூட ஆகிவிடுகிறது.

ஐசியூ

ஐசியூ

இதனால் நோய் தீவிரம் அடைந்து சம்பந்தப்பட்டவர்கள் ஐசியூ செல்லவும் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் 90 நிமிடங்களில் அதாவது ஒன்றரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்டறியும் தொழில்நுட்பம்

கண்டறியும் தொழில்நுட்பம்

அதுவும் முகக் கவசம் மூலமே கொரோனா வைரஸை கண்டறியும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த மாஸ்கில் சென்சார்கள் உள்ளன.

சிந்தடிக்

சிந்தடிக்

இவற்றின் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா என்பதை மாஸ்க் போட்டிருப்பவர் சொல்ல வேண்டும். தனிநபர் உரிமையை காக்க பரிசோதனை முடிவுகள் மாஸ்கின் உட்புறத்தில் வெளியாகும். அந்த சென்சார்களில் எளிதில் ப்ரீஸ் ஆகும் பொருட்கள் ஒரு சிறிய சிந்தடிக்கில் ஃபைபரில் வைக்கப்பட்டுள்ளது.

முடிவுகள்

முடிவுகள்

இவை கொரோனா பரிசோதனை செய்யும் நபரின் சேம்பிள் வெளியே மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும். எளிதில் அணிந்து கொள்ளும்படியான ஸ்பெக்ட்ரோமீட்டரையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அதன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகளை மொபைலுக்கும் அனுப்பி வைக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+