பிறமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல.. அரசு காரணமில்லை.. "பேக் - நியூசே" காரணம்.. மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிறமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல,மத்திய அரசு காரணம் இல்லை. இது தொடர்பாக இணையத்தில் பரவிய பொய்யான செய்திதான் காரணம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறி உள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுக்க வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்ட நிலையில் அடிப்படை வசதி இல்லாத ஆயிரக்கணக்கான பிறமாநில தொழிலாளர்கள் நடத்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர்.

இதனால் பல பிறமாநில தொழிலாளர்கள் பலர் நாடு முழுக்க பலியான சம்பவங்கள் நடந்தது. இந்த நிலையில் இப்படி இடம்பெயர்ந்த பிறமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை. அதுகுறித்து போதிய டேட்டா இல்லை என்று நேற்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த நிலையில் இன்று பிறமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல மத்திய அரசு காரணம் இல்லை. இது தொடர்பாக இணையத்தில் பரவிய பொய்யான செய்திதான் காரணம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறி உள்ளது.இது தொடர்பாக இன்று திரிணாமுல் எம்பி மாலா ராய் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியில், லாக்டவுன் அறிவிக்கும் முன் பிறமாநில தொழிலாளர்கள் நலன் குறித்தும், இடம்பெயர்வு குறித்தும் அரசு வகுத்த திட்டமென்ன என்று கேட்டார்.

பதில் அளித்தார்

பதில் அளித்தார்

இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், பிறமாநில தொழிலாளர்கள் இடம்பெயர்வுக்கு அரசு காரணம் இல்லை. இது தொடர்பாக வெளியான பொய்யயான செய்திகள்தான் காரணம். லாக்டவுன் பல நாட்கள் நீடிக்கலாம் என்று அப்போது பரவிய சில வதந்திகள்தான் திடீரென இவர்கள் இடம்பெயர காரணம். ஆனால் அரசு இதற்கு தயாராக இருந்தது.

தேவை பூர்த்தி

தேவை பூர்த்தி

பிறமாநில தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளுக்கு கஷ்டப்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. உணவு, குடிநீர் உள்ளிட்ட அவர்களின் அனைத்து அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது. இதற்காக தேசிய நிவாரண நிதி பயன்படுத்தப்பட்டது. மாநில நிவாரண நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

இதற்காக மத்திய அரசு 11902 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இருந்தது. மாநில அரசுகள் இதை பயன்படுத்திக் கொண்டது. பிறமாநில தொழிலாளர்களின் தேவைகள் லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. பிறமாநில தொழிலாளர்கள் மரணம் குறித்த கணக்கு எங்களிடம் இல்லை. இந்த கணக்கு எடுக்கப்படவில்லை, என்று அமைச்சர் நித்தியானந்த் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+