டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 லட்சமா? வாய்ப்பே இல்லை.. இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை.. மத்திய அரசு தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா மரணங்கள் எதுவும் மறைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கூடுதல் கொரோனா மரணங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்தியாவில் 40 லட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகி இருக்கலாம் என்று Center for Global Development என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் அடங்கிய குழு இந்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

பல்வேறு உலக அமைப்புகள், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் சேர்ந்து இந்த கணக்கை வெளியிட்டு உள்ளனர். இந்தியாவில் 40 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 419,021 பேர் மட்டுமே பலியாகி உள்ள நிலையில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இந்தியாவில் கொரோனா மரணங்கள் பல லட்சக்கணக்கில் இருக்கும் என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம் இந்தியாவில் கொரோனா மரணங்கள் பல லட்சக்கணக்கில் இருக்கும் என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்

மறுப்பு

மறுப்பு

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை மறுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா மரணங்கள் எதுவும் மறைக்கப்படவில்லை. இந்தியாவில் கூடுதல் கொரோனா மரணங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற செய்திகள் உண்மையானது கிடையாது.

நெறிமுறை

நெறிமுறை

கொரோனா மரணங்களை கணக்கிட முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. உலக சுகாதார மையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் முறையாக பின்பற்றி வருகிறோம். அதோடு முறையாக தினசரி பலி எண்ணிக்கையை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் கொரோனா மரணங்கள் விடுபட வாய்ப்பு இல்லை.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

அதேபோல் எண்ணிக்கையை குறைத்து காட்டவும் வாய்ப்பே இல்லை. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் சில ஆய்வுகள் நம்பும்படியாக இல்லை. மற்ற நாடுகளில் பலியான மக்களின் வயது, அவர்களின் பின்னணியை வைத்து இந்தியாவின் பலி எண்ணிக்கையை மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது மிகவும் தவறான கணக்கீட்டு முறை.

தவறு

தவறு

இந்திய மக்களின் பின்னணி, ஜீன், கொரோனா, பரவல், நோய் எதிர்ப்பு திறன் எதுவும் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை. அதேபோல் இந்தியாவில் இதே சமயத்தில் ஏற்பட்ட மற்ற கூடுதல் மரணங்கள் அனைத்தையும் கொரோனா மரணங்கள் என்ற கணக்கில் எழுத பார்க்கிறார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது கூட பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்தியாவில் 2020ல் மரண சதவிகிதம் 1.45 சதவிகிதமாக இருந்தது. கடந்த மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது கொரோனா பலி சதவிகிதம் 1.34 என்ற அளவிலேயே இருந்தது. இதனால் கூடுதல் மரணம் இந்த காலத்தில் ஏற்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை.

 வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்தியாவில் மாவட்ட நிர்வாகங்கள்தான் கொரோனா மரணங்களை பதிவு செய்து, அதை மாநில அரசுகளுக்கு அளிக்கிறது. அதை மாநில அரசு மத்திய அரசிடம் கொடுக்கிறது. இது ஒரு சங்கிலி முறை சோதனை ஆகும். இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்களை பதிவு செய்வதில் எந்த தவறும் நடந்து இருக்க வாய்ப்பே இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Fallacious: There is no underreport of Coronavirus death in India says Union health ministry after the report on 40 lakhs excess deaths in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X