டிஜிட்டல் பொருளாதாரத்தால் பேரழிவு என்று சொன்னீங்களே.. இப்போ கதையே மாறிடுச்சி! மோடியை புகழ்ந்த மாதவன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய போது இங்கு அது பேரழிவாக இருக்கும் என்றார்கள். ஆனால், ஓரிரு ஆண்டுகளில் முழுக்கதையும் மாறியது இது புதிய இந்தியா என கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல நடிகர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

75வது கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழா, பிரான்சில் கடந்த 17-ம் தேதி முதல் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதும், தங்களது படம் இந்த விழாவில் திரையிடப்படுவதும் ஒவ்வொரு திரைப்படக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது என்று சொல்லலாம்.

கேன்ஸ் பட விழா

கேன்ஸ் பட விழா

அந்த அளவுக்கு திரையுலகினரின் கனவுகளில் ஒன்று கேன்ஸ். அத்தகைய கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு இந்தியாவிலிருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். இந்தாண்டு கேன்ஸ் விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரைப்பிரபலங்கள் கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகோ படுகோனே, ஊர்வசி ரௌதாலா, தமன்னா, பூஜா ஹெக்டேஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சிவப்பு கம்பள வரவேற்பு

சிவப்பு கம்பள வரவேற்பு

மேலும் இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ரிக்கி கேஜ், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற துவக்க விழாவில் மாதவன், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர் மாதவன் பேச்சு

ஆர் மாதவன் பேச்சு

இந்நிலையில் கேன்ஸ் விழாவில் ஆர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபக்ட் திரைப்படம் திரையிடப்பட்டது. மாதவனின் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்த நிலையில் படம் குறித்து பேசிய மாதவன், பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் நரேந்திரமோடி

நிகழ்ச்சியில் பேசிய மாதவன், நமது பிரதமர் நரேந்திரமோடி மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்திய போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது... பலர் அது பேரழிவாக இருக்கும் என கூறினார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் முழுக்கதையும் மாறியது .. உலகில் மைக்ரோ பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியது. இது ஏன் நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இந்திய விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத்தர வேண்டிய அவசியமே ஏற்படவில்லை இது புதிய இந்தியா." என புகழ்ந்து தள்ளியுள்ளார். இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+