Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சர்வாதிகாரி?”.. மோடிக்கு எதிராக வடக்கிலிருந்து வந்த குரல்.. யார் இந்த இந்தி யூடியூபர் துருவ் ரதீ?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி படத்தை போட்டு சர்வாதிகாரி? என்று குறிப்பிட்டு பிரபல இந்து யூடியூபர் துருவ் ரதீ வெளியிட்டு இருக்கும் வீடியோ தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

இந்தி யூடியூபர்களில் மிகவும் பிரபலமானவராக விளங்கும் துருவ் ரதீ நேற்று பிரதமர் மோடி படத்தை போட்டு "சர்வாதிகாரி?" என்று குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோ தேசிய அளவில் பகிரப்பட்டு அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அவர் பேசுகையில், "நம் நாட்டில் ஜனநாயகம் முடிந்துவிட்டதா? நான் எழுப்பும் முக்கியமான கேள்வி இது. இந்த கேள்விக்கு உங்களில் பலரிடம் எளிமையான பதில் இருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும்.. நீங்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்கலாம். அதிக வாக்குகளை பெறும் அரசியல்வாதி ஆட்சிக்கு வருகிறார்.

Famous Hindi Youtuber Dhruv Rathee speech against Modi is Dictator?

இதன் மூலம் வெளிப்படையாக நம்நாட்டில் ஜனநாயகம் உள்ளது. ஆனால், இதைவிட ஆழமானது என் கேள்வி. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். இந்த வீடியோவை பார்த்த பின்னர் இந்த கேள்விக்கான உண்மையான பதிலை பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். அப்படி இருந்தும் பிரதமர் மோடியை நீங்கள் கடவுள் போன்று கருதினால் அல்லது மோடியின் செயல்களில் மக்களும் உதவும் என்று எண்ணும் ஒருவராக நீங்கள் இருந்தால், ஏற்கனவே நீங்கள் மோடி மீது பயம் கொண்டவராக இருந்தால், உங்கள் கண்களை திறந்து உண்மையை பார்ப்பது கடினமாக இருக்கும்.

மற்றவர்களுக்கு இந்த நாட்டின் மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் இந்த வீடியோவை அவசியம் பாருங்கள். ஒரு சம்பவம் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாக, சில ஆண்டுகளாக பல சம்பவங்கள் இதுபோல் ஒன்றன் பின் ஒன்றாக நடந்துகொண்டே இருக்கின்றன. இவை எல்லாம் ஒரே விசயத்தை சுட்டிக்காட்டுகின்றன. நமது ஒரே நாடு ஒரே கட்சியை நோக்கி முன்னேறி வருகிறது.

ஊடகங்களின் எதிர்குரலை ஒழிப்பது, எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்குவது, புதிய சட்டம் இயற்றி அரசுகளிடம் அதிகாரங்களை பறிப்பது, புலனாய்வு அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துவது, மாநில அரசு பணிகளில் ஆளுநர் மூலம் தலையிடுவது, மாநில அரசுக்கு வழங்கும் நிதியை நிறுத்துதல், போராட்டம் நடத்தும் மக்களின் உரிமைகளை பறிப்பது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள், நிதி வருவாயை மறைக்க தேர்தல் பத்திரங்களை பயன்படுத்துவது, எதிர்க்கட்சி தேர்தலில் வென்றாலும் மோசடி செய்தும் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.

பிரதமர் மோடியிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். சற்று கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். ஜனநாயகம் பற்றி பேசும் முன், ஜனநாயகம் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். ஆனால், மக்கள் பலர் இது பற்றி தவறாக புரிந்து வைத்துள்ளனர். நாட்டில் தேர்தல்கள் நடைபெற்று வாக்களித்தால் ஜனநாயக நாடு என்று நினைக்கிறார்கள். ஆனால், வட கொரியாவிலும் தேர்தல் நடைபெறுகிறது. நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. வட கொரியாவில் வழக்கம் போன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 100% வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். வெறும் தேர்தல்களை நடத்துவதால் ஜனநாயக நாடு என்று அர்த்தமாகிவிடாது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும். மக்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பல்வேறு கட்சிகள், வேட்பாளர்கள் வெற்றிபெற நியாயமான வாய்ப்புகள் இருக்க வேண்டும். ஒரு கட்சிக்கு பல நன்மைகள் இருக்கக்கூடாது. சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் தேர்தல் அதிகாரி மோடி செய்தார். தேர்தல் முடிவில் பாஜக வென்றது.

உச்சநீதிமன்றம் இதை கண்டித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இது ஒரு உதாரணம் மட்டுமே.." என்று குறிப்பிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டினார். இந்தியில் அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூபராக துருவ் ரதீ திகழ்ந்து வருகிறார். 1.4 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கும் இவரது கருத்துக்கள் விவாதப் பொருளை ஏற்படுத்தி வருகின்றன.

அரியானாவை சேர்ந்த 29 வயது இளைஞரான இவர் தற்போது வெளியிட்டு உள்ள வீடியோ 50 லட்சம் பார்வையாளர்களை யூடியூபில் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர். இது அல்லாமல் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப், எக்ஸ் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோவை அதிகளவிலான மக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+