Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொதப்பல் மன்னன் கேஎல் ராகுல்.. பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள சுப்மன் கில்.. வாய்ப்பு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேஎல் ராகுலை, அணியில் இருந்து நீக்கக்கோரி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பதிலாக சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று விமர்சனங்கள் தொடங்கியுள்ளன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எண்ணிலடங்காத வீரர்கள் தொடக்க வீரராக களமிறங்கி இருக்கிறார்கள். அதில் ஆசியாவைச் சேர்ந்த தொடக்க வீரர்களால் இதுவரை தென்னாப்பிரிக்காவில் 6 சதங்களும், இங்கிலாந்தில் 14 சதங்களும், ஆஸ்திரேலியாவில் 10 சதங்களும் அடிக்கப்பட்டுள்ளன.

இந்த 3 நாடுகளிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கி சதம் விளாசிய ஆசிய வீரர்கள் வெறும் இருவர் தான். அதில் முதல் வீரர் பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர். மற்றொருவர் இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..

ஆனால் கேஎல் ராகுலின் டெஸ்ட் சராசரியை பார்த்தால் எந்த விஷயமும் அறிய முடியாது. ஏனென்றால் 34.26 மட்டுமே கேஎல் ராகுலின் டெஸ்ட் சராசரி. தனது திறமைக்கேற்ப கேஎல் ராகுல் இதுவரை களத்தில் செயல்படவில்லை. ஆனால் 2016ல் ஆஸ்திரேலியா இதே பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்காக வந்த போது, 7 இன்னிங்ஸ்களில் 6 அரைசதம் விளாசி உள்ளார். அந்தத் தொடரில் மட்டுமல்லாமல் அதுவரை ஆடிய 14 இன்னிங்ஸ்களில் 10 அரைசதம் விளாசி இருந்தார்.

குட்டி கோலி

குட்டி கோலி

சரியாக 25 வயதை எட்டிய நிலையில், கேஎல் ராகுலால் முடியாதது ஒன்றுமில்லை என்று கிரிக்கெட் உலகம் கணித்தது. அதற்கேற்ப ஐபிஎல் தொடரில் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததோடு மட்டுமல்லாமல், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் பவுண்டரியை அடிக்க 108 பந்துகள் எடுத்துகொண்டார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாகவே கேஎல் ராகுல் பார்க்கப்பட்டார். இவ்வளவு ஏன் தமிழ்நாடு ரசிகர்கள் கேஎல் ராகுலை குட்டி கோலி என்றே அழைத்து வந்தனர்.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

பேடில் வீசப்படும் பந்துகளை சிக்சர் அடிக்க வேண்டும், நான்காவது ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகளை சரியாக தவிர்க்கவும் வேண்டும் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப கேஎல் ராகுல் பரிபூரண பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். அங்கிருந்து அடுத்த 6 ஆண்டுகளில் உச்சத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இடத்தை பறிகொடுக்க தயாராகிவிட்டார்.

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

2021ல் மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது முதல், லார்ட்ஸ் மற்றும் சென்சுரியனில் சதம் விளாசி டெஸ்ட் அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்கி கொண்டார் கேஎல் ராகுல். அதன் பின்னர் சரியாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இருந்து விலக, ரோகித் சர்மா காயத்தால் ஓய்வில் இருக்க வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனானார் கேஎல் ராகுல்.

 சுப்மன் கில்

சுப்மன் கில்

ஆனால் கேப்டனாகும் போது கேஎல் ராகுலின் பேட்டிங் சராசரி 17.12ஆக மட்டுமே இருந்தது. 8 இன்னிங்ஸ்களில் ஒரே ஒருமுறை மட்டுமே அரைசதம் விளாசியுள்ளார். இந்த சூழலில் தான் இளம் வீரரான சுப்மன் கில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மன் கில்லின் ஃபார்மை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரசிகர்களும், இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் உத்தரவிடாத குறையாக அறிவுறுத்தி வருகிறார்கள்.

சொதப்பிய ராகுல்

சொதப்பிய ராகுல்

இந்திய அணியின் துணைக் கேப்டன் மற்றும் கேஎல் ராகுல் மீதான நம்பிக்கை காரணமாகவே ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் கேஎல் ராகுல் மொத்தமாக 20, 17, 1 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் எந்த பிரஷரும் இல்லாமல் இருந்த போது கூட, கேஎல் ராகுலால் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

அபிநவ் முகுந்த் போன்ற அசாத்திய திறமை கொண்ட வீரர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஓய்வை அறிவித்து வர்ணனையில் இருக்கிறார்கள். உன்முக் சந்த் போன்ற வீரர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஓய்வை அறிவித்து, அமெரிக்காவுக்கு களமிறங்க தயாராகிவிட்டார். ஆனால் கேஎல் ராகுலோ, கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்து வருகிறார்.

 ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இவருக்காக உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளார்கள். உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்காமல் வெறும் ஐபிஎல் மட்டும் ஆடிவிட்டு ஃபார்மில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு பதிலாக, சரியான வீரர்கள் எப்போது தேர்வு செய்யப்படுவார்கள் என்று வெங்கடேஷ் பிரசாத்தை தொடர்ந்து ரசிகர்களும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+