டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் சாலை மறியல்... நெடுஞ்சாலையான வயல்வெளிகள்... மக்கள் வேதனை

Google Oneindia Tamil News

டெல்லி : சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் டில்லி - பானிபட் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் வயல்வெளிகளுக்குள் புகுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜனவரி 26 ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்ததை அடுத்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க போலீசாரும் சிங்கு எல்லையில் தடுப்புக்கள் அமைத்துள்ளனர்.

Farm stir: Singhu border blockage shifts highway through fields, adds to villagers woes

டெல்லி நெடுஞ்சாலை என்பது 4 வழித்தடங்களைக் கொண்டது. நவம்பர் 26 ம் தேதி முதல் சிங்கு கிராம பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து செல்பவர்கள் சிங்கு கிராமம் வழியாக தான் செல்ல வேண்டும்.

அவங்க எல்லாம் விவசாயிகள் இல்ல... கொளுத்திப்போட்ட கங்கனா... பதிவுகளை தூக்கிய ட்விட்டர்அவங்க எல்லாம் விவசாயிகள் இல்ல... கொளுத்திப்போட்ட கங்கனா... பதிவுகளை தூக்கிய ட்விட்டர்

தற்போது விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் போக்குவரத்து 2 கி.மீ., தொலைவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் 2 கி.மீ., சுற்றி வருவது, சிங்கு சுங்கச் சாவடியை தவிர்ப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளுக்குள் புகுந்து வாகனங்கள் சென்று வருகின்றன.

நெடுஞ்சாலைவாசிகள் தங்களின் நிலங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்துவதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிராமத்திற்குள் புகுந்து வாகனங்கள் செல்வதால் குழந்தைகள் வெளியே செல்ல முடியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

English summary
The farmers' protest and the police barricades blocking the Singhu border have taken a toll on the picturesque Delhi-Panipat highway, which now goes through the fields.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X