கடுமையாகும் விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு எடுக்கப்போகும் அஸ்திரம்.. செம்ம திருப்பம்?
டெல்லி: மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லியில முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாய தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒரு அதிகபட்ச நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதாவது பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளன. அத்துடன் பல்லாயிரம் விவசாயிகள் டெல்லியை முற்றகையிட்டுள்ளதால், மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முனைப்பு காட்டி வருகிறது.
விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்து பரிசீலித்து வருகிறது. என மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தன.
கடந்த வியாழக்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார், "நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி" உள்ளிட்ட "மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு" தீர்வு காண நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் கோரியுள்ளார். ஆனால் சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள், இதுபோன்ற சாத்தியம் குறித்து அரசாங்கம் இதுவரை விவாதிக்கவில்லை.

தீவிரமான போராட்டம்
நேற்று மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே வரும் 9ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கு விவசாய சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஆதாரம் இல்லை
நேற்று ஐந்து மணி நேரத்திற்கு மேல் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் "இந்த விவாதம் மிகவும் நல்ல சூழ்நிலையில் நடந்தது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அது குறித்த எந்த சந்தேகமும் முற்றிலும் ஆதாரமற்றது என்றும் நாங்கள் கூறினோம்" என்றார்.

வேளாண் அமைச்சர்
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் 40 உழவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றார்கள்.

முக்கிய கோரிக்கை
ஏபிஎம்சி மண்டிஸ் மற்றும் தனியார் சந்தைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை சமன் செய்தல், வர்த்தகர்களை கட்டாயமாக பதிவு செய்தல், மற்றும் சர்ச்சைகள் எழும்போது சிவில் நீதிமன்றங்களுக்கு உதவுவது போன்ற விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள்.இந்த விஷயத்தில் மததிய அரசுக்கும் விவசயா தொழிற்சங்கங்களுக்கும் உடன்பாடு எடப்படதாதால் நேற்று ஒரு கட்டத்தில், விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்வதாக அச்சுறுத்தினர்.

நிராகரித்தனர்,
இதனிடையே நேற்று விவசாய சட்டங்களின் சில விதிகளை திருத்துவதற்கு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்வந்ததாகவும், எம்.எஸ்.பி மற்றும் கொள்முதல் குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த வாய்ப்பை நிராகரித்தனர்.

ரத்து செய்ய வேண்டும்
விவசாயிகள் ஒரே கோரிக்கையைகாக மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். ‘ஆம் அல்லது இல்லை'" என்ற பதிலை எதிர்பார்த்தன. அமைச்சர்கள் இதில் எந்த முடிவை எடுக்கவில்லை. என்று ராஷ்டிரிய கிசான் மகாசங்கின் தலைவர் சிவ்குமார் கக்கா கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications