விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள்.. மேகாலயா ஆளுநர் அதிரடி பேச்சு.. போராட்டத்திற்கும் ஆதரவு
டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குரல் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் செங்கோட்டை அருகே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக பல்வேறு விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக், விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
போராடும் விவசாயிகளுக்கு எதிராக போலீசாரைப் பிரயோகப்படுத்தக் கூடாது என பிரதமரை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.
எந்த ஒரு நாட்டில் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் திருப்தியாக இல்லையோ அந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது. ஆகையால் விவசாயிகள், ராணுவ வீரர்களின் மன திருப்தியை எப்போதும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
நமது நாட்டில் விவசாயிகள் ஏழைகளாகின்றனர், ஆனால் அரசு ஊழியர்கள் பணபலம் பெற்று வருகின்றனர். நாம் ஏன் ஏழ்மையில் இருக்கிறோம் என்பதை விவசாயிகளால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை.
விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமலேயே இது நடக்கின்றது. விவசாயிகள் தங்களின் விலை பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற சட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. இவ்வாறு கூறியுள்ளார் ஆளுநர் சத்யபால் மாலிக்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications