Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியல் மீண்டும் கொதித்தெழும் விவசாயிகள்.. ராகேஷ் திக்காய்த்தை கைது செய்த காவல்துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த குவிந்து வரும் நிலையில் ஜந்தர் மந்தர் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Recommended Video

    Car வாங்க சென்ற விவசாயி! நக்கல் செய்த Salesman ! செம்ம Twist| Oneindia Tamil

    இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிகாயிட்-ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் 72 மணி நேர தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தற்போது இதன் தொடர்ச்சியாக இந்த போராட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

    Farmers re-boiling Delhi; The police arrested the leaders

    தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் உயிரிழந்தனர். சங்கத்தின் தலைவர்கள் பலர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில், வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தப்பட்டச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தற்போது விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய 'சம்யுக்த் கிஸான் மோர்ச்சா' எனும் அமைப்பு உத்தரப் பிரதேச மாநிலம் 'லக்கிம்பூர் கேரியில்' 72 மணி நேர தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி போராட்டமும் கடந்த 3 நாட்களாக நடந்து முடிந்தது. இதனையடுத்து நாட்டில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து தொடர் போராட்டங்களை நடத்த விவசாய சங்கங்கள் முடிவெடுத்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.

    டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை தொடங்கவுள்ள இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த 'பாரதிய கிஸான்' சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் 'ராகேஷ் டிகாயிட்'-ஐ காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவர் சம்யுக்த் கிஸான் மோர்ச்சா அமைப்பின் பிரபலமான முகமாக அறியப்படுகிறார்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர், மது விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு போலீஸார் அவரிடம் பேசி, அவரைத் சொந்த ஊர் திரும்பும்படி கேட்டுக்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற ராகேஷ் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்று விட்டார் என்று காவல்துறையின் சிறப்பு ஆணையர் தேபேந்திர பதக் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ராகேஷ், டெல்லி காவல்துறை மத்திய அரசின் சொல்படி இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார்.

    "மத்திய அரசாங்கத்தின் கட்டளைப்படி செயல்படும் டெல்லி காவல்துறையால் விவசாயிகளின் குரலை அடக்க முடியாது. இந்த கைது புதிய புரட்சியை ஏற்படுத்தும். இந்த போராட்டம் கடைசி மூச்சு வரை தொடரும். இது நிற்காது, சோர்வடையாது, தலைவணங்காது" என்று ராகேஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான கோபால் ராய் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    விவசாயிகளின் இந்த போராட்டம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க, திக்ரி எல்லை, முக்கிய சந்திப்புகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில், உள்ளூர் போலீசார் மற்றும் வெளிமாநிலப் படைகள் போதுமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளன என டெல்லி புறநகர் காவல்துறை துணை ஆணையர் சமீர் சர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+