டெல்லிக்கு பால் காய்கறி கட்! மல்யுத்த வீரர்களின் கோரிக்கை ஏற்காவிடில் "ஆக்சன்".. விவசாயிகள் வார்னிங்
டெல்லி: பாஜக எம்பிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில், டெல்லிக்கு பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் நிறுத்தப்படும் என விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள்/வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இவர்களின் இரண்டாவது போராட்டமாகும். கடந்த ஜனவரி மாதம் இதே கோரிக்கையை முன்வைத்து இவர்கள் போராட்டத்தை தொடங்கியபோது அரசியல் கட்சியினர் ஆதரவளிக்க முன் வந்தனர். ஆனால் இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறி இவர்கள் தன்னிச்சையாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டம் நாடு முழுவதும் விவாத பொருளான நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இது குறித்து விசாரணை நடத்த முன்வந்தது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் அளித்த வாக்குறுதியையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் விசாரணை நடந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை பிரிஜ் பூஷன் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரண்டாவது முறையாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியது நாடு முழுவதும் மீண்டும் விவாதங்களை கிளப்பியது.
இந்த முறை அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆதரவை மல்யுத்த வீரர்கள் வரவேற்றனர். சூழல் இவ்வாறு இருக்க கடந்த 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் மறுத்துவிட்டது. போராட்டக்காரர்கள் விரும்பினால் வேறு இடத்தில் அனுமதியளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். இது மல்யுத்த வீரர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படவே, "பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி பிரிஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்களை எடுத்துக்கொண்ட டெல்லி போலீஸ் நியாயம் கேட்டு போராடிய எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய 7 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தைதான் எடுத்துக்கொண்டது" என்று குற்றம்சாட்டினர்.
மேலும், பிரிஜ் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள்/வீராங்கனைகள் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை கங்கை நதி கரைக்கு வந்த வீரர்களிடமிருந்து பதக்கங்களை விவசாய சங்க தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் இப்பிரச்னைக்கு 5 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் காப் பஞ்சாயத்துகளை நடத்தினர். இதில், மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்க ஜூன் 5ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு மீறும் பட்சத்தில் அதாவது ஜூன் 5ம் தேதி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) முடிவெடுத்துள்ளது. முசாபர்நகரில் நடைபெற்ற காப் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல டெல்லிக்கு பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட் கூறியுள்ளார். மேலும் கூறுகையில், "மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஏற்றுக்கொள்ள முடியாது. முழு அரசாங்கமும் சேர்ந்த ஒரு நபரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது" என்று விமர்சித்துள்ளனர்.
முன்னதாக வீரர்கள் டெல்லி கேட் அருகே உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் டெல்லி காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications