Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை குறிவைத்து கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அவருக்கு மிக அருகே வந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சரியான நேரத்தில் செயல்பட்ட என்ஜிஏ படைகள் பரூக் அப்துல்லாவை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான ஃபரூக் அப்துல்லா (88), கடந்த புதன்கிழமை மாலை ஜம்முவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது தான் அவரை குறிவைத்து கொலை முயற்சி நடைபெற்றது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாயிண்ட் பிளாங் எனப்படும் மிக அருகில் இருந்து அவரை சுட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Farooq Abdullah Assassination Attempt Kashmir leader Survives Point-Blank Attempt at Jammu Wedding

கொலை முயற்சி

அதாவது அப்துல்லாவிற்கு மிக அருகில் சென்று அந்த நபர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அப்துல்லாவை சுட முயன்றான். ஆனால், தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் இதைப் பார்த்தவுடன், அவர்கள் அந்த நபரைத் தள்ளிவிட்டனர். அதற்குள் அந்த நபர் துப்பாக்கியைச் சுட்டுவிட்டாலும் கூட, அந்த குண்டு அப்துல்லாவை தாக்காமல் வேறு எங்கேயோ போனது.. கொலை முயற்சியில் இருந்து அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அப்துல்லாவை நோக்கி அந்த நபர் வருவதும் அருகே வந்தவுடன் துப்பாக்கிச் சூடு நடத்த முயல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது. நொடியும் தாமதிக்காமல் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் சரியான நேரத்தில் இதில் தலையிட்டதே அப்துல்லாவின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அவர்கள் ஒரு நொடி தாமதித்திருந்து இருந்தாலும் விபரீதம் நடந்து இருக்கும்.

துப்பாக்கிச் சூடு

இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற அந்த நபரை அங்கிருந்தவர்கள் தாக்கினர். பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி, 65 வயதான கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். ஜம்முவின் புராணாஸ் மாண்டியைச் சேர்ந்த கமலை அங்குள்ளவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

20 ஆண்டுகள்

அப்துல்லாவை கொல்ல முயன்றதற்காகத் தான் வருத்தப்படவில்லை என்றும் சொல்லப்போனால் கடந்த 20 ஆண்டுகளாக இதற்காகவே காத்திருந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். ராயல் பார்க் ஹோட்டல் திருமண விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்ட போது நடந்த இந்த கொலை முயற்சி தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். கொலை முயற்சி என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்த அப்துல்லா மகன் உமர் அப்துல்லா, இறைவன் கருணை மிக்கவர் என்றும் என் தந்தை நூலிழையில் தப்பினார் எனவும் பதிவிட்டுள்ளார். அவர் மேலும், "தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு நபர் மிக அருகில் வந்து சுட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் தான் சரியான நேரத்தில் துப்பாக்கியைத் திசைதிருப்பினர். இதனால் தான் துப்பாக்கிச் சூடு தோல்வி அடைந்தது. என்எஸ்ஜி படையில் Z+ பாதுகாப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சருக்கு இவ்வளவு அருகில் ஒருவரால் எப்படி வர முடிந்தது எனப் பல கேள்விகள் எழுகின்றன" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணை

இந்தச் சம்பவத்தின் போது, அப்துல்லாவுடன் துணை முதலமைச்சர் சுரேந்தர் சவுத்ரி மற்றும் முதலமைச்சரின் ஆலோசகர் நசீர் சொகாமி ஆகியோர் உடனிருந்தனர். இது தொடர்பாக முதல்வரின் ஆலோசகர் நசீர் கூறுகையில், "இது ஃபரூக் அப்துல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சி தான். ஆனால் இறைவன் அருளால் யாருக்கும் காயம் இல்லை. இதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பாதுகாப்புக் குறைபாடு எப்படி ஏற்பட்டது என்பது புரியவில்லை. இப்போது விசாரணை நடக்கும் சூழலில் உடனே முடிவுக்கும் வர இயலாது. ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பாக உள்ளார். அதுவே ஒரு நல்ல செய்தி" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+