Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலி கழுத்தில் ஏறுவதற்குள்.. சோலிய முடித்த 'சோலி கீ பீச்சே க்யா ஹை'.. டெல்லி திருமணத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விடிந்தால் திருமணம் நடக்க உள்ள நிலையில், இப்படியொரு சம்பவம் மண்டபத்தில் நடந்துவிட்டது. இந்த செய்திதான் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதனால் மணமக்களுக்கு இணையவாசிகள் சமாதானம் செய்து வருகிறார்கள்.. என்ன நடந்தது தலைநகரில்?

புதுடில்லி : டில்லியில் வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபல ஹிந்தி பாடலுக்கு மணமகன் நடனமாடியதால், கோபமடைந்த பெண்ணின் தந்தை திருமணத்தை பாதியில் நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

father in law

திருமணங்கள்: எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு, கடைசி நிமிடங்களில் நின்றுள்ளன.. மணமகன் அலலது மணமகள் என இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும். இதனால் மணமேடை வரை வந்த, பல திருமணங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இதனால், அதே கல்யாண மண்டபத்தில், மாப்பிள்ளை, பெண்ணுக்கு தங்கள் சொந்தக்காரர்களுடன், "திடீர் திருமணங்களும்" நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு.

விநோதங்கள்: அதிலும் சிலசமயம், வடமாநிலங்களில் விநோத நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு.. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாததால் ஒரு மணமகள், தன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.. உருது வார்த்தைகளை சொல்லாததால், இன்னொரு மணமகள் திருமணத்தை நிறுத்திவிட்டார்.. ஆனால், இப்போதும் வடமாநிலத்தில் ஒரு திருமணம் நின்றுள்ளது.. திருமணத்தை நிறுத்தியது, வருங்கால மாமனார் ஆவார்.

டெல்லியைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு 26 வயதாகிறது.. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்வை காண்பதற்காக, மணமக்கள் குடும்பங்களிலிருந்து உறவினர்களும், நண்பர்களும் மண்டபத்தில் குவிந்திருந்தனர். திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

பேண்டு வாத்தியம்: இதையொட்டி நடந்த மணமகன் ஊர்வலத்தில், பேண்டு வாத்தியங்கள் முழங்க மணமகன் மற்றும் அவரது வீட்டார் பங்கேற்றனர்.. பேண்டு வாத்தியங்கள் அதில் இசைக்கப்பட, ஆடல் பாடலுடன் உற்சாகமாக , மணப்பெண்ணின் வீட்டுக்கு ஊர்வலம் வந்தது.. அப்போது, மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஒருவரையொருவர் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். ஒட்டுமொத்த உறவினர்களும் அங்கே திரண்டிருந்ததால், அவர்களை குஷிபடுத்துவதற்காக ஆடல் - பாடல் நிகழ்ச்சியும் அப்போது நடந்தது.

அப்போது, "சோலி கீ பீச்சே க்யா ஹை..." என்ற பிரபல ஹிந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டது.. இந்த பாடலை கேட்டதுமே, மணமகனின் நண்பர்கள் உற்சாகமாக டான்ஸ் ஆடினார்கள்.. அத்துடன், மாலையும் கழுத்துமாக நின்றுகொண்டிருந்த மணமகனையும் ஆடச்சொல்லி வற்புறுத்தினார்கள்.. உடனே மாப்பிள்ளையும் மகிழ்ச்சி பொங்க, நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

டான்ஸ்: மாப்பிள்ளையின் இந்த டான்ஸை பார்த்து, பெண்ணின் அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது.. பாரம்பரியமிக்க தங்கள் குடும்பத்தினர் முன்பு மணமகன் இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வது? என்று ஆத்திரம் அடைந்தார்.. உடனே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஹாலிலிருந்து வெளியேறி, இந்த திருமணத்தை இப்போதே நிறுத்துங்கள் என்று உத்தரவிட்டார். இதைப்பார்த்து, மணப்பெண், மணமகன் மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

ஜாலிக்காகவும், நண்பர்களின் ஆசைக்காகவும் டான்ஸ் ஆடியதாக மணமகன் எடுத்து சொன்னார்.. ஆனால் அப்போதும் பெண்ணின் அப்பாவுக்கு கோபம் தீரவில்லை.. மணமகன் குடும்பத்தினரும் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். அப்போதும் அவர் எதையுமே காதில் வாங்கவில்லை. திருமணத்தை நிறுத்தியதுடன், மாப்பிள்ளை வீட்டாருடன் யாரும் இனி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தன்னுடைய குடும்பத்தாருக்கு உத்தரவு போட்டுவிட்டார். இதனால் அந்த திருமணமே நின்றுவிட்டது.

கடுங்கோபம்: கடந்த 1993ல் கல்நாயக் என்ற படத்தில் வெளியான இந்த பாடல், பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது.. ஆனால், ஆபாசமான வரிகள் உள்ளதாக பலரது எதிர்ப்பையும், கண்டனத்தையும் சம்பாதித்தது.. இந்த பாட்டுதான், சமீபத்தில் க்ரூ படத்திலும் ரீமேக் செய்யப்பட்டு, வெளியாகியிருந்தது. எனவேதான், இந்த திருமண நிகழ்விலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த பாட்டின்மீது பலருக்கும் கோபம் இருந்தநிலையில், தன்னுடைய உறவினர்கள் முன்னிலையிலேயே மணமகன் டான்ஸ் ஆடியதை மணமகளின் அப்பாவால் ஜீரணிக்க முடியவில்லை.. 2 நிமிடத்தில் திருமணத்தையே நிறுத்திவிட்டார். அதுவரை ஆட்டமும், பாட்டமுமாய் குஷியுடன் காணப்பட்ட அந்த இடமே, திடீரென சோகமயமாகிவிட்டது.. இதில் உச்சக்கட்ட சோகத்திற்கு ஆளானவர்கள் மணமக்கள்தான்.. இருவருமே கண்ணீர் மல்க பிரிந்து சென்றது, காண்போரை கலங்க செய்துவிட்டதாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+