நடுவானில் "அலறல்.." குடிபோதையில் விமான பெண்ணிடம் சில்மிஷம்.. எல்லை மீறிய ஆண் பயணி! பகீர் சம்பவம்
டெல்லி: இந்தியாவில் விமானங்களில் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடுவானில் மற்றொரு ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மிடில் கிளாஸ் மக்களின் வருமானம் அதிகரிப்பதே விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.
கொரோனா பரவல் ஏற்பட்ட ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளும் இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஏர்லைன்கள்: ஒரு காலத்தில் இந்தியா வானை ஏர் இந்தியா ஆக்கிரமித்து வந்தது. இருப்பினும், தனியார் நிறுவனங்களின் வருகை அதற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்தியாவில் இண்டிகோ தான் டாப் இடத்தில் இருக்கிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் திணறியே வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் மத்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா இப்போது மீண்டும் டாடா வசம் சென்றுள்ளது. இதுபோக புதிதாக ஆகாஷா ஏர் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமானத்துறையில் மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பல நேரங்களில் விமானங்களில் இப்போது மிக மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ஆண் ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மோசமான சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
மோசமான சம்பவம்: இருப்பினும், அதன் பின்னரும் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவில்லை. இதனிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு மோசமான சம்பவம் இப்போது நடந்துள்ளது. இண்டிகோ விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் பயணி ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர், ராஜிந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 6E 1428 என்ற இண்டிகோ விமானத்தில் துபாயிலிருந்து அமிர்தசரசுக்கு வந்துள்ளார். நடுவானில் அவர் விமான ஊழியரிடம் அத்துமீறிய நிலையில், இரவு 8 மணிக்கு விமானம் தரையிறங்கியே உடனேயே அவர் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
என்ன நடந்தது: பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள கோட்லி கிராமத்தில் வசிக்கும் இந்த நபர், விமானத்தில் அதிக அளவு மது அருந்தியுள்ளார். மோதையில் இருந்த அவர் பெண் விமான ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
நடுவானில் இந்த அத்துமீறல் சம்பவம் நடந்த நிலையில், விமானத்தில் இருந்த ஊழியர்கள் நிலைமையைச் சமாளித்தனர். விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் பாதுகாப்பு மேனேஜர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

அதிகரிக்கும் சம்பவங்கள்: இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஆட்சேபனைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த மாதம், நியூயார்க்கில் இருந்து டெல்லி வரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த இந்தியர் ஒருவர், வாக்குவாதத்தின் போது மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த மோசமான சம்பவம் நடந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications