இந்தியா முக்கியம்! ரிசர்வ்களை திறந்து விட்ட பிடன்! ஆபர்களை வாரி வழங்கிய ரஷ்யா! கேம் ஆடும் வல்லரசுகள்
டெல்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் மார்க்கெட்டை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ரஷ்யா முயன்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாவின் ரஷ்யா சார்புநிலை அதிகரிக்க கூடாது என்று அமெரிக்காவும் தீவிரமாக முயன்று வருகிறது. இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு ஆபர்களை வாரி வழங்க தயாராகி வரும் நிலையில்.. சர்வதேச அரசியலில் தற்போது இந்தியாவை வைத்து இரண்டு வல்லரசுகள் ஆடும் கேம் குறித்து பார்ப்போம்!
Recommended Video

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் இந்தியா எந்த பக்கமும் சார்பு நிலை எடுக்கவில்லை. ரஷ்யாவை இந்தியா மேலோட்டமாக ஆதரித்தாலும் வெளிப்படையாகஎந்த நாட்டையும் இந்தியா ஆதரிக்கவில்லை.
ஐநா அவையில் பல்வேறு வாக்கெடுப்பில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கவில்லை. இந்த நிலையில்தான் ரஷ்யா இந்தியாவிற்கு கூடுதல் கச்சா எண்ணெய்யை அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா பெரிய மார்க்கெட்
இந்தியா தனது கச்சா எண்ணெய் பயன்பாட்டில் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவிடம் இருந்து 8 சதவிகிதம் எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. ரஷ்யாவிடம் இருந்து வெறும் 1 சதவிகிதம் மட்டுமே எண்ணெய் வாங்குகிறது. மற்றபடி பெரும்பாலான எண்ணெய்யை இந்தியா மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்துதான் வாங்குகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் மார்க்கெட்டில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் இரண்டாம் இடம் வகிக்கிறது.

ரஷ்யா ஆபர்
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் ரஷ்யா எண்ணெய் வழங்கி வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்தியாவில் இப்போதைக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு
இந்தியாவிற்கு ரஷ்யா ஒரு பேரால் விலையில் 35 டாலர் தள்ளுபடி தருகிறது. இந்த தள்ளுபடி என்பது போருக்கு முன்பாக இருந்த கச்சா எண்ணெய் விலையில் இருந்து செய்யப்படும் தள்ளுபடி ஆகும். கடந்த டிசம்பரில் இருந்து மார்ச் வரை ரஷ்யாவிடம் இருந்து ஒரு பேரல் கூட வாங்காத இந்தியா அதன்பின்பு மட்டும் 5 கார்கோ கப்பலில் மொத்தம் 16 மில்லியன் பேரல்களை வாங்கி உள்ளது. கடந்த வருடம் மொத்தமாக வாங்கிய கச்சா எண்ணெயில் பாதி அளவை இந்த வருடம் வெறும் ஒன்றரை மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளது.

ரஷ்யா வெளியுறவுத்துறை
சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவ் கூட, இந்தியாவுடன் கூடுதல் வர்த்தகம் செய்ய விரும்புகிறோம். இந்தியாவுடன் கச்சா எண்ணெய் மற்றும் பாதுகாப்பு தளவாட ரீதியாக ஒப்பந்தங்களை செய்ய விரும்புகிறோம். இதற்காக பொருளாதார தடையில் சில விஷயங்களை பைபாஸ் செய்யவும் விரும்புகிறோம். இந்தியாவிற்கு தேவையான எந்த விதமான பொருட்களையும் ஏற்றுமதி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதிகரித்துள்ளது
இந்த தள்ளுபடிக்கு பின் ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அதிகரித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை துரிதமாக அதிகரிக்க கூடாது. அமெரிக்கா நட்பு நாடுகள் ரஷ்யாவை சார்ந்து இருக்க கூடாது. எங்களின் பொருளாதார தடைகளை எதிர்க்கும் விதமாக அல்லது மட்டுப்படுத்தும் விதமாக செயல்படும் நாடுகளை நாங்கள் விரும்ப மாட்டோம். சர்வதேச பிரச்சனைகளை ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூற வேண்டும், என்று அமெரிக்கா மிரட்டல் தொனியில் கூறியுள்ளது.

அமெரிக்கா மிரட்டல்
அமெரிக்கா இந்தியாவின் மார்க்கெட்டை தக்க வைக்கும் ஆர்வத்தில் உள்ளது. ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய்யை இந்தியா வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால்தான் அமெரிக்கா, இந்தியாவிற்கு எரிவாயு, பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதியை, உதவிகளை செய்ய நாங்கள் தயாராகி இருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதெல்லாம் போக அமெரிக்காவின் எண்ணெய் ரிஸர்வ்களை பயன்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா திறந்துவிட்டது
அமெரிக்க அதிபர் பிடன் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக ரிசர்வில் இருக்கும் எண்ணெய்களை இந்த மாதம் கடைசியில் திறந்து விடுகிறார். தினமும் 1 மில்லியன் பேரல் என்ற கணக்கில் 6 மாதத்திற்கு இவர் எண்ணெய்களை திறந்து விடுகிறார். இதை இந்தியா வாங்க வேண்டும் என்று பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவின் இருக்கும் 478 மில்லியன் பேரால் கையிருப்பில் இருந்து இந்த எண்ணெய் திறந்து விடப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளின் மார்க்கெட் ரஷ்யாவிற்கு செல்ல கூடாது என்பதால் பிடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

இந்தியா ஏன் முக்கியம்?
ஆனால் இந்தியாவோ ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதை குறைக்காது என்றே தோன்றுகிறது. அமெரிக்கா இதை விட குறைந்த விலையில் கொடுக்கும் பட்சத்தில் அமெரிக்கா பக்கம் இந்தியா செல்லுமே தவிர. ரஷ்யாவை இப்போது இந்தியா கைவிட வாய்ப்பு குறைவு. சமீபத்தில் இதை பற்றிய பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் நலன் டீல் கிடைத்தால் அதை வாங்குவதில் தஹ்வாரு என்ன? இது இந்தியாவின் தனிப்பட்ட முடிவு.

பிரச்சாரம்
ஐரோப்பாவும் கூட ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் பிப்ரவரியில் ஐரோப்பா வாங்கிய எண்ணெய்யை விட 15 சதவிகிதம் அதிகமாக மார்ச்சில் வாங்கி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டார். இதனால் ரஷ்யாவின் ஆபரை இந்தியா இப்போதைக்கு மறுக்காது என்றே தோன்றுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications