மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட உச்சநீதிமன்றம் கெடு
டெல்லி: இறுதிசெய்யப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை வெளியிடுவதற்கான இறுதி காலக்கெடுவை ஜுலை 31ம் தேதி என்பதை ஆகஸ்ட் 31 ம் தேதியாக மாற்றி வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் ஊடுருவிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் வரைவு பட்டியல் கடந்த ஜுன் 26 ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது ஏற்கனவே பதிவேட்டில் இருந்த ஒரு லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 20 சதவீதம் பேரை சேர்ப்பது மற்றும் நீக்குவது குறித்து சரிபார்ப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறியது.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி ஆர் எப் நரிமன் தலைமையிலான அமர்வு இன்று மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. ஏற்கனவே 76 லட்சம் பேரின் விவரங்களை அரசு சரிபார்த்துள்ளதால் செய்திருப்பதால் மீண்டும் சாரிபாக்க வேண்டிய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இறுதிசெய்யப்பட்ட அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை வெளியிடுவதற்கான இறுதி காலக்கெடுவை ஜுலை 31ம் தேதி என்பதை ஆகஸ்ட் 31 ம் தேதியாக மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications