மத்திய பட்ஜெட்டின் இறுதி கட்டம்.. 'அல்வா' கொடுத்து தொடங்கி வைத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் 2024-25-ன் இறுதி கட்டத்தைக் குறிக்கும் வகையில் அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் இறுதி இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இறுதி பட்ஜெட்டாக, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

Final stage of Union Budget 2024-25 commences with Halwa Ceremony

பொதுவாக நாட்டின் பட்ஜெட் ரகசியங்களைப் பாதுகாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளர்களை அறையில் வைத்து பூட்டுகிற லாக் இன் நடைமுறை தொடங்கும். இதற்கு முன்னதாக அல்வா தயாரித்து அனைவருக்கும் வழங்கப்படும். இது காலந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Final stage of Union Budget 2024-25 commences with Halwa Ceremony

இதனடிப்படையில் டெல்லியில் இன்று அல்வா வழங்கி லாக் இன் நடைமுறையை தொடங்கி வைத்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். முன்னதாக பட்ஜெட் அச்சகத்துக்கு சென்று அதற்கான ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Final stage of Union Budget 2024-25 commences with Halwa Ceremony

பொதுவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு நிதிநிலை அறிக்கை (பொதுவாக பட்ஜெட் என அழைக்கப்படும்), மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா உட்பட அனைத்து 14 மத்திய பட்ஜெட் ஆவணங்களும் "யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்" தடங்கல் இல்லாமல் கிடைக்கும்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எளிய வடிவிலான இந்த டிஜிட்டல் வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் பட்ஜெட் ஆவணங்களைப் பெறலாம். இது இருமொழிகளில் (ஆங்கிலம் & ஹிந்தி), ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும். இந்த செயலியை மத்திய பட்ஜெட் இணையதளத்தில் (www.indiabudget.gov.in) பதிவிறக்கம் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+