டி.ஆர்.பாலு கேட்ட கேள்வி.. "உண்மை கசக்கும்".. நறுக் பதிலடி தந்து திணறடித்த நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தின்போது வங்கிகள் வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
லோக்சபாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது... நேற்றைய தினம், திமுகவின் டிஆர் பாலு இது தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.. அதற்கு பதிலளித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதாவது:
"வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் திவாலாகிய நபா்களிடம் இருந்து, அந்த தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...

வங்கிகள்
ஆனால், இப்படி ஒரு நடவடிக்கை எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது வங்கிகள் கையாளவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசுதான், திவாலானவர்களிடமிருந்து வாராக்கடன் தொகையை முதல் முறையாக வசூலித்து வருகிறது.. இதுவரை ரூ.10,000 கோடிக்கும் அதிகமான தொகையை பொதுத்துறை வங்கிகள் திவாலான நபர்களிடமிருந்து வசூலித்துள்ளன.

நிறுவனங்கள்
கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது அரசியல் நோக்கத்துக்காக பல நிறுவனங்களுக்கு கடன் தரப்பட்டது.. அந்த வாராக்கடனும் முறையாக வசூலிக்கப்படவில்லை என்றார்.. அரசியல் லாபத்துக்காக, வங்கிகளில் கடன்களை முந்தைய காங்கிரஸ் அரசு தாராளமாக வழங்கியது என்றும், அவ்வாறு வழங்கிய கடன்கள் பல, வாராக்கடன்களாக மாறியுள்ளன என்றும் ஆனால், வாராக் கடன்களை வசூலிக்க ஒரு நடவடிக்கை கூட காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை என்ற அடுக்கடுக்கான நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

உண்மை கசக்கும்
குறிப்பாக, காங்கிரஸின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மறுபடியும் நிர்மலா சீதாராமன் பேசும்போது, ''உண்மை கசக்கத்தான் செய்யும். அரசியல் லாபத்துக்காகவே, காங்கிரஸ் ஆட்சியின்போது, கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன,'' என்று மறுபடியும் கூறினார்...

நடவடிக்கைகள்
சிறு சேமிப்பு முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அறிதிறன்பேசி செயலி அடிப்படையில் கடன் வழங்குவதாகத் தெரிவித்து வரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து கொண்டே வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூடுதலாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications