பட்ஜெட் 2024- 2025: நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த ஊதா கலர் சேலை! சிறப்பம்சங்கள் என்ன?
டெல்லி: 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அவர் பட்ஜெட் தாக்கலுக்கு என்ன நிறத்தில் சேலை அணிந்திருந்தார் தெரியுமா?
மத்திய பட்ஜெட்டை அவர் 7ஆவது முறையாக தாக்கல் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் அணியும் சேலை பல்வேறு சிறப்புகளையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு அவர் வெள்ளை நிறத்தில் கட்டங்கள் போடப்பட்டு ஊதா நிறத்தினால் ஆன பார்டர் கொண்ட சேலையை அணிந்திருந்தார்.

அதற்கு ஏற்றாற் போல் பிளைன் ஊதா நிறத்தில் பிளவுஸும் இருந்தது. 7 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார். இந்த நிலையில் அவர் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் அணிந்து வரும் புடவைகள் மீது பெண்களுக்கு ஆர்வம் இருக்கும்.
நிர்மலா சீதாராமன் ஏதோ வெளிநாட்டு புடவையை அணிவதில்லை. நம் இந்திய ஜவுளி, கைவினைத் திறன் கொண்ட கலைஞர்களின் வாழ்க்கை தரத்தையும் அவர்களது மிதமிஞ்சிய உழைப்பையும் பறைசாற்றும் விதமாகவே அவர் புடவைகளை தேர்வு செய்கிறார். 2019 ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டின் போது பாரம்பரியமாக பட்ஜெட்டை கொண்டு வரும் சூட்கேஸை தவிர்த்தார்.
அதற்கு பதிலாக தங்க இழைகள் கொண்ட சிவப்பு நிற பட்டு துணியில் தேசிய சின்னம் பொறித்த பையில் பட்ஜெட் அறிக்கைகள் கொண்ட டேப்லெட்டை கொண்டு வந்தார். அவரும் அரக்கு நிறத்தில் தங்க இழைகள் கொண்ட மங்களகிரி பட்டுச் சேலையை அணிந்திருந்தார்.

அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் மஞ்சள் நிற பட்டு புடவையை அணிந்து வந்திருந்தார். மஞ்சள் மங்களகரமானது. இது செழிப்பை தரும். கொரோனா தொற்று பரவி கிடந்த நிலையில் இந்த நிறம் அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம்.
அது போல் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது தெலுங்கானாவை சேர்ந்த போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இது கைகளால் நெய்யப்பட்ட தனித்துவமான புடவையாகும். ஐவரி நிறத்தில் பெரிய சிவப்பு பார்டர் கொண்டு அணிந்திருந்தார். 2022 ஆம் ஆண்டு அவர் பொம்காய் சேலையை அணிந்திருந்தார். இது மஸ்டர்ட் நிறத்தில் அடர் பிரவுன் நிற பார்டர் கொண்டிருந்தது.
2023 ஆம் ஆண்டு சிவப்பு நிறத்தில் ஒரு பட்டு சேலை அணிந்திருந்தார். அது போல் 2024 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது மேற்கு வங்கத்தின் கைவினை கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக காந்தா எம்பிராய்டரி வேலைகள் செய்யப்பட்ட நீல நிற டஸ்ஸர் பட்டு சேலையில் இருந்தார். இந்த ஆண்டு முழு பட்ஜெட்டின் போது வெள்ளை நிறத்தில் ஊதா நிற புடவை அணிந்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications