பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலி.. டெல்லியில் சோகம்!
டெல்லி: டெல்லி அருகே அலிபூர் மார்க்கெட்டில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெயிண்ட் தொழிற்சாலையில் உள்ள ரசாயனங்கள் காரணமாக தீயின் வேகம் அதிகரித்தது. இதையடுத்து கூடுதலாக 14 தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டன. தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தொழிற்சாலையில் பிடித்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் கரும்புகை அதிகளவில் சூழ்ந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு தொழிற்சாலையில் யாரேனும் சிக்கி உள்ளனரா? என தீயணைப்பு வீரர்கள் பார்த்தனர்.
இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து எப்படி நடந்து என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications