ஓ மை காட்.. செருகிய கண்கள்.. வானில் அலறல்.. "யாராச்சும் டாக்டர் இருக்கீங்களா".. டக்கென எழுந்த தமிழிசை
ஃபிளைட்டில் நடுவானில் மயக்கடைந்த பயணிக்கு தமிழிசை முதலுதவி செய்தார்
டெல்லி: நடுவானில் திடீரென பயணிக்கு கண்கள் செருகி கொண்டு திணறியதில், பிளைட்டில் பரபரப்பு ஏற்பட்டது..!
நேற்று இரவு 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து ஹைதராபாத் வழியாக விமானம் ஒன்று சென்னை புறப்பட்டது.. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த ஃபிளைட் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, பயணி ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.. அவரது உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது.. கண்கள் சொருகிய நிலையில் மயங்கி கொண்டிருந்தார்.

ஃபிளைட்டில் பரபரப்பு
இதை விமான பணிப்பெண் ஒருவர் கவனித்துவிட்டு, பதறிப்போனார்.. உடனே அவசர அவசரமாக, இந்த பிளைட்டில் டாக்டர் யாராவது இருக்கிறீர்களா? பயணி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது, எமர்ஜென்சி" என்று அறிவித்தார்.. அதை கேட்டதும், டக்கென எழுந்து வந்தார் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன்.. அவரும் அதே விமானத்தில் பயணம் செய்தது அப்போதுதான் அனைவருக்கும் தெரியவந்தது..

நடுவானில் சத்தம்
சத்தத்தை கேட்டதும், முன்பகுதியில் இருந்து எழுந்து, பின்பகுதிக்கு வேகவேகமாக சென்றார்.. அங்கு தனியாக உட்கார்ந்திருந்த பயணியை பரிசோதித்தார்.. அவரால் முழுவதும் கண்களை திறக்க முடியவில்லை.. உடனடியாக முதலுதவி சிகிச்சையும் தந்து, கையோடு சில மருந்துகளையும் தந்தார் தமிழிசை.. அதற்குள் பிளைட்டில் இருந்தவர்கள் எல்லாம் டென்ஷன் ஆகிவிட்டனர்.. சிறிது நேரம் கழித்து, அந்த பயணி லேசாக கண் விழித்தார்.. எதிரே உட்கார்ந்திருந்த தமிழிசையை பார்த்ததும், இப்போது பரவாயில்லை என்பது போல் லேசாக புன்முறுவல் செய்தார்.

போலீஸ் ஆபீசர்
அவர் தனியாக உட்கார்ந்திருந்ததால், அவருக்கு தைரியம் சொன்ன தமிழிசை, அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு, ஹைதராபாத் வரை பயணம் செய்துள்ளார்... ஃபிளைட் தரையிறங்கியதுமே, விமான நிலைய மருத்துவ குழுவினரிடம் அந்த பயணியை ஒப்படைத்துவிட்டு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றார் தமிழிசை.. இதற்கு பிறகு, உடல்நிலை பாதித்த அந்த பயணி யார் என்று ஆராயப்பட்டதில், அவர் ஒரு ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.

விடிகாலை நேரம்
விடிகாலை 3.30 மணிக்கு, பயணி துடிப்பதை கவனித்து, சரியான நேரத்தில், அலர்ட் செய்த விமான பணிப்பெண்ணை டாக்டர் தமிழிசை பாராட்டினார்... அதே விமானத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்.. நடந்த சம்பவம் பற்றி தமிழிசையிடம் கேட்டபோது, "தக்க நேரத்தில் அந்த பணிப்பெண் கவனித்துள்ளார்... அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போயிருந்தது... தலையும் குழைந்து விழும் நிலையில் இருந்தார்... கவனிக்காமல் இருந்திருந்தால் மயக்க நிலையை அடைந்து இருப்பார்" என்றார்.

முதல் உதவி
தமிழிசை அந்த பயணியுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதுபோல் பல முறை, முதலுதவி செய்துள்ளார் தமிழசை.. கடந்த ஜனவரி மாதம், புதுச்சேரியில், தமிழிசையின் தெருவில் ஒரு பெண் டூவீலரில் இருந்து மயங்கி விழுந்துவிட்டார்.. அந்த வழியாக சென்ற தமிழிசை அதை கவனித்து,உடனடியாக அந்த பெண்ணை மீட்டு முதலுதவி தந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..
Recommended Video

ஹைவேஸ்
அதேபோல, பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஹைவேஸ்களில் விபத்துகளில் காயமடைந்து உயிருக்கு போராடிய பலரை மீட்டு முதலுதவி தந்துள்ளார்... விழுப்புரத்தில் ஒருமுறை நடந்த கூட்டத்தில் ஒருபெண் மேடையேறும்போது, கால் தவறி இடறிவிழுந்துவிட்டபோது, அந்த பெண்ணின் காலை பிடித்து அழுத்திவிட்டு முதலுதவி தந்த நெகிழ்வும் நடந்தன.. "மருத்துவம் என்பது தொழில் அல்ல, அது சேவை" என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications