அயோத்தி கும்பாபிஷேக விழா.. கோவில் கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை.. வெளியான முதல் போட்டோ
அயோத்தி: ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள கடவுள் பால ராமரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 51 இன்ச் கொண்ட சிலையின் முகம் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கோவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மாற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேக வழாவை நடத்த பல்வேறு ஏற்பாடுகளை உத்திர பிரதேச அரசு செய்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த பூஜையில் 100 க்கும் மேற்பட்ட ஆச்சார்யார்கள் ஈடுபட்டுள்ளார்கள். ராமர் சிலை பிரதிர்ஷ்டைக்காக சராயு நதியில் இருந்து புனித நீர் கலசங்கள் நேற்று முன் தினம் எடுத்து வரப்பட்டன.
அயோத்தி ராமர் கோவிலில் கருவறைக்குள் வைப்பதற்காக கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகி வடிவமைத்த 200 கிலோ எடையிலான பால ராமர் சிலை, லாரி மூலம் நேற்று முன் தினம் இரவு அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை அந்த சிலை கிரேன் மூலம் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன. ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
கருவறைக்கு வெளியே வாஸ்து பூஜை செய்யப்பட்டு பிரதிஷ்டைக்கான ஐதீக நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று கோவில் தலைமை அர்ச்சகர் கூறினார். இதனிடையே, கருவறைக்குள் வைக்கப்பட்ட பல ராமரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. 51 இன்ச் கொண்ட சிலையின் முகம் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.
வரும் 22 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கும்பாபிஷேக விழாவை நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் சிற்ப்புகளை சொல்வது என்றால் இந்தக் கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது.
இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.












Click it and Unblock the Notifications