இந்தியாவுக்கு வந்த 5 ரபேல்.. முதல் விமானத்தை இயக்கி தரையிறக்கியவர் யார்னு தெரியுமா...?
டெல்லி: இந்திய மண்ணில் இன்று 5 ரபேல் போர் விமானங்கள் வெற்றிகரமாக வந்து இறங்கின. சுமார் 7,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டு, இந்திய மண்ணில் முதல் ரபேல் விமானத்தை தரையிறக்கி இருக்கிறார் விங் கமாண்டர் ஹிலால் அஹ்மத் ரதர். யார் அவர், அவருக்கு ஏன் முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று பார்ப்போம்.
இன்று பிற்பகல் ரபேல் போர் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைந்தன. அப்போது ரேடியோ சிக்னல்கள் மூலம் ரபேல் விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த விமானத்தை இயக்கிய பெருமைக்கு உரியவர் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் ஹிலால் அஹ்மத் ரதர்.

ஹிலால் அஹ்மத் ரதர்
நிலாவுக்கு இதுவரை சென்று இருந்தாலும் முதன் முதலில் காலடி எடுத்த வைத்த நீல் அம்ஸ்ட்ராங்கை தான் உலகம் கொண்டாடுகிறது. முதலில் எதையும் செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது போல இந்திய விமான படை வரலாற்றில் ரபேல் விமானத்தை முதலில் இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார் ஹிலால் அஹ்மத் ரதர்.

முகம்மது அப்துல்லா ரதர்
இவர் ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போரில் ஈடுபட்டு சேனா மெடல் பெற்றவர் முகம்மது அப்துல்லா ரதர். அவருடைய மகன்தான் ஹிலால் அஹ்மத் ரதர்.

காணாமல் போன ரதர்
இவரது தந்தை 1962ஆம் ஆண்டு நடந்த போரின் போது காணாமல் போய்விட்டதாகவும், இறந்து போய்விட்டதாகவும் கூறப்பட்டது. அவரின் சீருடை மட்டுமே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்களுப்பிறகு உயிருடன் திரும்பி வந்தார். தொடர்ந்து இந்திய ராணுவத்திலேயே பல்வேறு பணிகளை வகித்த அவர் 2013 ஆம் ஆண்டு காலமானார்.

ரகசியம் காக்கப்பட்டது
ரபேல் விமானம் ஒப்பந்தம் வெற்றியடைய களத்தில் முன்நின்று பணியாற்றிய இவர் தான். இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்க முக்கிய காரணமாக இருந்தவர். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் குறித்த விஷயங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தன.

படித்தது சைனிக் பள்ளி
ஹிலால் அஹ்மத் ரதர் தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பசியாபாத் நகரைச் சேர்ந்தவர். சைனிக் பள்ளியில் படிப்பு முடித்து, National Defence Academy-யில் படித்து பட்டம் பெற்றார்.

பணியில் பெற்ற உச்சம்
1988-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் fighter pilotஆனார்.
1993- flight lieutenant
1996- Squadron Leader
2004 -Wing commander
2010- group captain
2016 - Air Commodore என பல பதவிகளையும் வகித்து இருக்கிறார்,
விங் கமாண்டர் ஆக சிறப்பாக பணியாற்றியதற்காக வாயு சேனா மெடல், குழு தலைவர், விஷித் சேவா மெடல் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

பிரான்சில் தங்கிய ஹிலால்
பிரான்சில் இருந்து ரபேல் விமானங்களை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இவரது திறனால் இன்று ரபேல் விமானங்கள் திட்டமிட்டது போல் இந்திய மண்ணில் இறங்கின. இந்தியாவின் தேவைக்கேற்ப ரபேல் விமானங்களில் மாற்றங்கள் செய்தல், ஆயுதங்களை பொருத்துதல், தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பிரான்ஸின் டாசால்ட் நிறுவனத்திற்கு இவர் தான் இந்தியா சார்பில் உதவி செய்துள்ளார். இதற்காக பிரான்சில் சில ஆண்டுகள் தங்கியிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று செய்துள்ளார்.
பிரான்சில் விமானங்கள் வழியனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் உடன் இணைந்து இவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

3,000 மணி நேரம் இயக்கியவர்
MiG 21s, Mirage-2000, Kiran உள்ளிட்ட போர் விமானங்களை 3,000 மணி நேரம் எந்த விபத்தும் இல்லாமல் ஓட்டிய அனுபவம் பெற்றவர் ஹிலால். தற்போதும், க்டன்தாஹ் 27ஆம் தேதி பிரான்சில் புறப்பட்டு இன்று அம்பாலா வந்துள்ளார். இடையில் ஒரு முறை எரிபொருள் நிரப்ப ஐக்கிய அரபு எமிரேட்டில் இறங்கினார். இந்திய விமான படையிலேயே அதிநவீன தொழில் நுட்பம் கொண்டது ரபேல் போர் விமானங்கள். இதனை முதன் முதலாக இயக்கிய இந்திய பைலட் இவர் தான். இந்தியாவின் சூழல் , தேவைக்கேற்ப பிரான்ஸுக்கு ஆலோசனையும் இவர் தான் கொடுத்திருக்கிறார்,
ஹிலாலுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியும் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications