உலகிலேயே முதல் முறை..நெடுஞ்சாலையில் பேம்பூ தடுப்புகள்..நிதின் கட்காரி பெருமிதம்..அப்படி என்ன ஸ்பெஷல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மகாராஷ்டிராவில், சந்திராபூர் மற்றும் யவத்மாலை இணைக்கும் நெடுஞ்சாலையில் பேம்பூ தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கடகரி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிராவில், சந்திராபூர் மற்றும் யவத்மாலை இணைக்கும் நெடுஞ்சாலையில் பேம்பூ தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பேம்பூக்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த தடுப்பூகள் மிகச்சிறந்த சாதனை என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

சென்னை - பெங்களூர் இடையேயான விரைவுச்சாலை முதல் டெல்லி -லக்னோ விரைவுச்சாலை வரை பல்வேறு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை திட்ட பணிகள்

சாலை திட்ட பணிகள்

பயணிகளின் பயண நேரத்தை குறைப்பது முதல் விபத்துக்களை தடுப்பது வரை என பல்வேறு வகைகளில் வாகன ஓட்டிகளுக்கு பயன் அளிக்கும் விதமாக இந்த சாலை திட்டங்களில் முன்னுரிமை கொடுத்து பணிகள் நடக்கின்றன. சுற்றுப்புற சூழலுக்கும் முக்கியத்தும் கொடுத்து சாலை திட்டங்களை செயல்படுத்தவும் முனைப்பு காட்டப்படுகிறது. இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக பேம்பூ தடுப்புகள் மகாராஷ்டிராவில் உள்ள சாலைகளில் நிறுவப்பட்டுள்ளது.

பேம்பூ தடுப்புகள்

பேம்பூ தடுப்புகள்

சந்திராபூர் மற்றும் யவத்மாலை இணைக்கும் நெடுஞ்சாலையில் தான் இந்த பேம்பூ தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பேம்பூக்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த தடுப்பூகள் மிகச்சிறந்த சாதனை என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நிதின் கட்கரி கூறியிருப்பதாவது:

கிளாஸ் 1 என்ற ரேட்டிங்க்

கிளாஸ் 1 என்ற ரேட்டிங்க்

"உலகின் முதல் பேம்பூ விபத்து தடுப்புகள் வானி - வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான சிறந்த சாதனை இதுவாகும்" என்று பதிவிட்டுள்ளார். வலிமையான ஆயுதங்களை கொண்டவர் என்ற பொருள் படும் வகையில் பஹு பல்லி என குறிப்பிட்டுள்ள நிதின் கட்கரி, கடுமையான சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு கிளாஸ் 1 என்ற ரேட்டிங்கையும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மூங்கில் கம்புகளால் அமைக்கப்படுகின்றன

மூங்கில் கம்புகளால் அமைக்கப்படுகின்றன

மேலும் இந்த பேம்பூ தடுப்புகளின் மறுசுழற்சி மதிப்பு 50-70 சதவீதம் என்றும் இரும்புகளில் அமைக்கப்படும் தடுப்புகளின் மறுசுழற்சி மதிப்பு விகிதம் 30-50 சதவிகிதம் மட்டுமே என்று குறிப்பிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்தத பேம்பூ தடுப்புகள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பேம்பூ தடுப்புகள், கிரியோசோட் ஆயில் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட உயர் அடர்த்தி பாலி எத்திலீன் கோட்டிங் செய்யப்பட்டு மூங்கில் கம்புகளால் அமைக்கப்படுகின்றன. இந்த சாதனை மூங்கில் துறைக்கும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சிறந்த ஒன்று எனவும் ஸ்டீல் தடுப்புகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் இந்த பேம்பூ தடுப்புகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அதன் விளைவுகளுக்கும் தீர்வு காணும்" எனவும் நிதின் கட்காரி கூறியிருக்கிறார்.

பேம்பூ தடுப்புகள் எப்படி அமைகிறது?

பேம்பூ தடுப்புகள் எப்படி அமைகிறது?

பேம்பூ தடுப்புகள் எப்படி அமைகிறது என்பதை எளிமையாக சொல்வது என்றால், நெடுஞ்சாலைகளில் நாம் பயணிக்கும் போது சாலையோரங்களில் ஸ்டீல் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இருப்போம். சாலைகளில் குறுக்கீடுகள் வராமல் தராமல் தடுக்கும் நோக்கிலும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கும் வாகனங்கள் சாலைக்கு வெளியே செல்வதை தடுக்கும் வகையிலும் இந்த தடுப்புகள் அமைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+