எதெல்லாம் பாலியல் தொல்லை.. தீர்ப்பில் வரையறை வகுத்த சண்டிகர் நீதிமன்றம்
டெல்லி: பிளையிங் கிஸ் கொடுப்பதும், கண் சிமிட்டுவதும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாக இருப்பதால், non-verbal பாலியல் தொந்தரவு ஆக கருதப்பட வேண்டும் என்று சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
62 வயது முதியவர் ஒருவர் வீட்டு வாசலில் சுத்தம் செய்து கொண்டு இருந்து பெண்ணை பார்த்து கண் அடித்து, 500 ரூபாய் நோட்டை கீழே போட்டு மன ரீதியாக துன்புறுத்திய சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண்ணை பார்த்து கண் அடித்த முதியவர்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அசோக் குமார் என்ற 62 வயது முதியவர் வெளியே வந்துள்ளார். அப்போது அந்த முதியவர் பெண்ணை பார்த்து கண் சிமிட்டியதோடு, பறக்கும் முத்தமும் கொடுத்து இருக்கிறார்.
பின்னர் 500 ரூபாய்யை எடுத்து பெண்ணை நோக்கி வீசி மன ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன முதியவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் கடும் மன உளைச்சல் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சண்டிகர் நீதிமன்றம் விசாரணை
இது தொடர்பான வழக்கு சண்டிகர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த. இந்த வழக்கின் விசாரணையின் போது, அசோக் குமார் தரப்பு வழக்கறிஞர் அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்து வாதிட்டார். அசோக் குமார் தரப்பு வாதிடும் போது, தனது கட்சிக்காரர் அசோக் குமார் வீட்டை நோக்கி புகார் அளித்த பெண் குப்பையை வீசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், தனது பேரனுக்காக அசோக் குமார் ஐஸ் கிரீம் வாங்கும் போது 500 ரூபாய் நோட்டு கீழே விழுந்துள்ளது. முதியவர் போதையில் இருந்தார் என்பதை நிருபணம் செய்ய எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை" எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
பிளையிங் கிஸ் கொடுப்பது பாலியல் தொந்தரவு
இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354A (பாலியல் தொந்தரவு) மற்றும் 509 (பெண்ணின் கௌரவத்தை அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் முதியவர் செயல்பாடு தண்டனைக்குரிய குற்றமாகும்.
பிளையிங் கிஸ் கொடுப்பது மற்றும் கண் அடிப்பது ஆகிய செயல்கள் வாய்மொழியற்ற பாலியல் தொந்தரவு எனக் கருதப்படுகின்றன. இவை புகாரளித்த பெண்ணின் கண்ணியத்தை மீறும் வகையில் இருப்பதால் இந்தியக் குற்றச் சட்டத்தின் 354A பிரிவின் படி அவர் மீதான குற்றம் உறுதியாகிறது என்று தீர்ப்பளித்தது.
பரோல் ரத்து செய்யப்படும்
குற்றவாளி என்று உத்தரவிட்டாலும் ஆறு மாத காலத்திற்கு நல்ல நடத்தை மற்றும் அமைதியை பேணும் நிபந்தனையுடன், அசோக் குமாரை பரோலில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த ஆறு மாத காலத்தில் அவரது நடத்தை கண்காணிக்கப்படும் என்றும் அவர் கண்ணியக்குறைவாக நடந்தால் பரோல் ரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications