Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் இன்று நடக்கிறது மேயர் தேர்தல்.. டென்ஷனில் பாஜக - ஆம் ஆத்மி கட்சிகள்.. செம எதிர்பார்ப்பு

மேயர் தேர்தலில் நியமன கவுன்சிலர்களும் வாக்களிப்பார்கள் என்று கூறி, தற்காலி அவைத்தலைவர் புதியதாக 10 நியமன கவுன்சிலர்களையும் அறிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து இன்று டெல்லி மேயர் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே தேர்தல் நடத்த முயன்றபோது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் மோதிக்கொண்டதால் 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெற உள்ள தேர்தல் மிகுத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநகராட்சியை கடந்த 15 ஆண்டுகளாக பாஜக கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், கடந்த டிசம்பரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது ஆம் ஆத்மி ஆம் ஆத்மி 134 வார்டுகளிலும், பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி அவை கூட்டப்பட்டது. அவையின் முதல் கூட்டத்தில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

இந்நிலையில் இந்த தேர்தலை ஒருங்கிணைக்க மாநகராட்சி அவையின் தற்காலிக தலைவராக சத்ய சர்மாவை டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா நியமித்திருந்தார். இந்த நியமனத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. சத்ய சர்மா பாஜக ஆதரவாளர் என்றும், அவரை ஆளுநர் வேண்டுமென்றே தற்காலிக அவை தலைவராக நியமித்துள்ளார் என்றும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. அதற்கேற்றார் போல சத்ய சர்மாவும் புதிய விதிமுறையை உருவாக்கினார்.

நியமன கவுன்சிலர்கள்

நியமன கவுன்சிலர்கள்

அதாவது மேயர் தேர்தலில் நியமன கவுன்சிலர்களும் வாக்களிப்பார்கள் என்று கூறி புதியதாக 10 நியமன கவுன்சிலர்களையும் அறிவித்தார். இங்கு பஞ்சாயத்து பெரியதாக வெடித்தது. தங்களை கலந்தாலோசிக்காமல் இந்த நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளார் என்றும், இவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்கள் எனவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. மேலும், இந்த நியமன கவுன்சிலர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பதையும் ஆம் ஆத்மி எதிர்த்தது. எனவே இதற்கு முன்னர் தேர்தல் நடத்த முயன்றபோது அனைத்து கூட்டங்களில் தொடர்ந்த சலசலப்பு எழுந்ததால் தேர்ததல் தற்போது வரை நடத்தப்படாமலேயே இருக்கிறது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

இந்நிலையில் இந்த நியமன கவுன்சிலர்கள் வாக்களிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் உச்சநீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நியமன கவுன்சிலர்கள் தேர்தலில் வாக்களிக்க தடைவிதித்தது. மட்டுமல்லாது அடுத்த 24 மணி நேரத்தில் மேயர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது.

தேர்தல் தேதி

தேர்தல் தேதி

உத்தரவையடுத்து தேர்தல் பிப்ரவரி 22ம் தேதி நடத்தலாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் ஆளுநருக்கு பரிந்துரைக்க ஆளுநரும் இதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் தேதியை பிப்.22 என இறுதி செய்தார். இதனையடுத்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 250 கவுன்சிலர்கள், டெல்லியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 7 எம்.பிக்கள், மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பிக்கள் மற்றும் 14 எம்எல்ஏக்கள் என மொத்தம் 274 பேர் வாக்களித்து மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதில் பாஜக சார்பில் ரேகா குப்தா மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக நடந்த தேர்தல் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 250 மாநகராட்சி வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வென்றிருப்பதால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக டெல்லி மாநகராட்சியை இழக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+