டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கறி சாப்பிட்டு மதுவை ஏற்கும் தெய்வம் தான் காளி.. லீனாவிற்கு திரிணாமுல் எம்பி மொய்த்ரா சப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: காளி ஆவணப்படம் தொடர்பான போஸ்டர் சர்ச்சையாகி உள்ள நிலையில் ‛‛இறைச்சி சாப்பிட்டு மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் தான் காளி'' என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசினார்.

Recommended Video

    கையில் சிகரெட்டுடன் காளி! சர்ச்சையில் சிக்கிய Leena Manimegalai என்ன நடந்தது?

    தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் லீனா மணிமேகலை. இவர் இவர் ஆவணப்படங்களை இயக்கி வருகிறார்.

    நுபுர் சர்மா பற்றி உச்சநீதிமன்ற கருத்து: தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 117 பேர் கடிதம்நுபுர் சர்மா பற்றி உச்சநீதிமன்ற கருத்து: தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 117 பேர் கடிதம்

    இவர் காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார். இது ‛ஆகா கான்' அருங்காட்சியகத்தில் வெளியானது.

    சர்ச்சை போஸ்டர்

    சர்ச்சை போஸ்டர்

    இந்நிலையில் படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை வெளியிட்டு இருந்தார். அதில், காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியை கையில் ஏந்தியிருப்பது போன்றும் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்ய வலியுறுத்தல்

    கைது செய்ய வலியுறுத்தல்

    இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், சமூக வலைதளத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதேநேரத்தில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    போலீஸ் வழக்குப்பதிவு

    போலீஸ் வழக்குப்பதிவு

    இதற்கிடையே லீனா மணிகேமலை படம் குறித்து விளக்கம் அளித்தார். டோரோண்டோ மாநகரத்தில் காளி தோன்றி வீதிகளில் உலா செல்பும்போது நடக்கும் சம்பவம் தான் இந்த ஆவணப்படம் என விளக்கம் அளித்தார். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

    இறைச்சி சாப்பிட்டு மது ஏற்பு

    இறைச்சி சாப்பிட்டு மது ஏற்பு

    இந்நிலையில் காளி ஆவணப்படம் போஸ்டர் விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ராவிடம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "என்னை பொறுத்தவரை காளி இறைச்சி சாப்பிட்டு, மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். தெய்வத்தை கற்பனை செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது. சில இடங்களில் கடவுள்களுக்கு விஸ்கி வழங்கப்படுகிறது. வேறு சில இடங்களில் அது தெய்வத்துக்கு எதிரானதாக உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

    English summary
    Trinamool Congress MP Mahua Moitra comment on controversy over a movie poster showing Goddess Kaali smoking a cigarette. She says “Kaali to me, is a meat-eating, alcohol-accepting goddess.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X