ஆக்ஸ்பாம் இந்தியாவில் சிபிஐ அதிரடி சோதனை.. வெளிநாடு நிதி விவகாரத்தில் விதிமீறலால் வழக்கு.. அதிரடி
டெல்லி: வெளிநாட்டு நிதி விவகாரத்தில் விதிகளை மீறியதாக கூறி ஆக்ஸ்பாம் இந்தியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனையின் பின்னணி பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் ஆக்ஸ்பாம் இந்தியா எனும் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பெண்கள், சிறுமிகள் உள்பட சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவிகளும் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் ஆக்ஸ்பாம் இந்தியா மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதாவது கடந்த 2013 முதல் 2016 காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறி பணம் நேரடியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆக்ஸ்பாம் இந்தியாவின் எப்சிஆர்ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் பேரில் ரத்து செய்யப்பட்து. மேலும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் ஆக்ஸ்பாம் இந்தியா வெளிநாடு அமைப்பு மூலம் அதன் எப்சிஆர்ஏ உரிமத்தை மீண்டும் பெற இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயன்று வந்தது தெரியவந்தது. இந்நிலையில் தான் சிபிஐ சார்பில் டெல்லியில் உள்ள ஆக்ஸ்பாம் இந்தியா அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலும் ஆம்ஸ்பாம் இந்தியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சோதனையின்போது சில முக்கிய இ-மெயில் விபரங்கள் சிபிஐ கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுபற்றிய பிற விபரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையே சிபிஐ விசாரணைக்கு முறைப்படி ஆக்ஸ்பாம் இந்தியா ஒத்துழைக்கம். ஏனென்றால் ஆக்ஸ்பாம் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் எந்தவித தயக்கமும் இன்றி முறைப்படி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என அந்த நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications