மீண்டும் டி.வி சீரியலில் நடிக்கப் போகிறாரா முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் டி.வி சீரியலில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ஸ்மிருதி இரானி மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஸ்மிருதி இரானி, டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் அவர் மீண்டும் நடிக்கச் சென்றதாக தகவல் பரவியது.

தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்மிருதி இரானி, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். அவர் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்து, மத்திய அமைச்சராகப் பதவி பெற்றார்.

smriti irani bjp television

நடந்து முடிந்த 2024 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார். பாஜகவில் தேர்தலில் தோற்ற சிலர் ராஜ்யசபா எம்.பி ஆக்கப்பட்டாலும், ஸ்மிருதி இரானிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்தியில் கலக்கும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அனுபமா" என்ற டிவி சீரியலில் நடிக்கும் நடிகையுடன் ஸ்மிருதி இரானி இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அவர் சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த தகவலை ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார். இந்த தகவல் பொய்யானது என்றும், தான் டிவி சீரியலில் நடிக்கவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+