Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர்+மிசோரத்துக்கு புதிய ஆளுநர்கள்.. கேரளா, ஒடிசா, பீகார் மாநில ஆளுநர்களை மாற்றியது மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மற்றும் முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோருக்கு மத்திய அரசு ஆளுநர் பதவி வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல கேளரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநரையும் மாற்றி குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் ஆளுநராகவும், முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

governors manipur ajay kumar bhalla

மணிப்பூரில் நீண்ட நாட்களாகவே வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மத்திய அரசு அறிக்கை விடும்போதெல்லாம் அன்றைய தினம் துப்பாக்கிச்சூட்டில் யாரோ ஒருவர் மணிப்பூரில் உயிரிழந்திருப்பார். இது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். அங்கு நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இப்போது வரை மோடி அங்கு செல்லவில்லை.

மணிப்பூரை பொறுத்தவரை இரண்டு தரப்பினர் இருக்கின்றனர். ஒன்று குக்கி உள்ளிட்ட பழங்குடியினர். மற்றொரு பிரிவினர் பழங்குடியினர் அல்லதோர். இங்குள்ள மலை பிரதேசங்கள் பழங்குடியினருக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. ஆனால் அதை மாற்றுவோம் என்று கூறி பாஜக தேர்தலை எதிர்கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து இதற்கான அறிவிப்பை வெளியிட.. வன்முறை வெடித்தது. பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக போராட, வன்முறையாளர்கள் அவர்கள் மீது கொடூர தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

மணிப்பூர் கதை இப்படியாக இருக்க, கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான், மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தது, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுடன் ஒத்துழைக்காமல் இருந்தது என ஆரிஃப் மீது ஏராளமான புகார்கள் குவிய தொடங்கின. இந்த புகார்களுக்கு எல்லாம் உச்சமாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் வைத்த வலியுறுத்தல் பெரும் விமர்சனங்களை பெற்றிருந்தது.

தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்துவிட்டார் என்பதற்காக கே.என.பாலகோபாலை அமைச்சரவையிலிருந்து தூக்க வேண்டும் என்று ஆரிஃப் முகமதுகான் கேட்டிருந்தார். அமைச்சரை பதவிநீக்கம் செய்ய, இப்படியான காரணத்தை நாங்கள் இதற்கு முன்னர் கேட்டதில்லை என ஆளும் கட்சி விமர்சனத்தை முன்வைத்தது.

ஆரிஃபின் இப்படியான நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு தீவிரமாக போராட்டத்தில் குதித்தது. ஒரு கட்டத்தில் ஆளும் சிபிஎம் கட்சியின் வாலிபர் அமைப்பான இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர், ஆளுநர் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதன் மூலம் ஆளுநர் ஆரிஃப் கானுக்கும், மாநில அரசுக்குமான நெருக்கடி உச்சத்தை தொட்டது. மத்திய அரசின் திட்டங்களை ஆளுநர் கேரளாவில் அமல்படுத்த முயல்கிறார் என்கிற குற்றச்சாட்டு வலுத்த நிலை தற்போது ஆளுநர் மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்த ஆளுநர் மாற்றத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக புதிய ஆளுநர்களின் நியமனம் இருக்கிறது. மத்திய அரசுக்கு நெருக்கமாக இருப்பவர்கள், அரசின் கொள்கைகளை பிரதிபலிப்பவர்கள் தொடர்ந்து ஆளுநர் பொறுப்புகளுக்க நியமிக்கப்படுவதன் மூலம், மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் தவிர்க்க முடியாததாகிறது. எனவே நடுநிலையானவர்களை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில்தான் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மிசோரம் ஆளுநராகவும், முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு துணை நிற்கும் என்பது போக போகத்தான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+