விஜய் மட்டுமில்லை.. கரூர் சம்பவத்திற்காக.. ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சிபிஐ முன் ஆஜர்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியும் தற்போதைய ஆயுதப்படை டிஜிபியுமான டேவிட்சன் தேவாசீர்வாதம் சிபிஐயிடம் ஆஜராகியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததும் செப்டம்பர் 28 ஆம் தேதியே செய்தியாளர்களை சந்தித்து நடந்தது என்ன என்பதை தேவாசீர்வாதம் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரையின்போது துயரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, முதலில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், முறையான சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
ஓய்வு பெற்ற நீதிபதி
வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்குமாறு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்த விரிவான உத்தரவைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) அதிகாரிகள் கரூருக்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். கடந்த சில வாரங்களாக கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
அஜய் ரஸ்தோகி
விசாரணையை மேற்பார்வையிட, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.க்கள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோர் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கரூருக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுக்குப் பிறகு, விசாரணையின் அடுத்த கட்டமாக பல்வேறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
புஸ்ஸி ஆனந்த்
இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
டெல்லியில் ஆஜரான ஆட்சியர்
மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்ட அனைவரும் டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகி, அங்கு மூன்று நாட்கள் விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விஜய்க்கு சம்மன்
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று ஆஜராகியுள்ளார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தின் போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது ஆயுதப்படை டிஜிபியாக இருக்கிறார். இந்த நிலையில் தேவாசீர்வாதமும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
கரூர் சம்பவம் நடந்து முடிந்ததுமே அங்கு என்ன நடந்தது என்பதை டேவிட்சன் தேவாசீர்வாதம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கினார். அப்போது இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர் பதிலளித்தார்.
நடந்தது என்ன?
அப்போது அவர் பேசுகையில் செப். 23 அன்று தவெகவினர் முதலில் லைட்ஹவுஸ் ரவுண்டானாவுக்கு அனுமதி கேட்டனர். பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு, மேம்பாலம் என அப்பகுதி ஆபத்தானதும், அதிக கூட்டம் சேரும் அபாயம் கொண்டது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. உழவர் சந்தை மைதானமும் குறுகிய பகுதி என்பதால் நிராகரிக்கப்பட்டது.
காவல்துறை பரிந்துரையின் பேரில், தவெகவின் மனுவை ஏற்று வேலுசாமிபுரத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பிரசாரத்திற்கு ஒரு எஸ்பி, 3 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 17 இன்ஸ்பெக்டர்கள், 58 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஐஜி கண்காணிப்பில் இருந்தார்.
எத்தனை போலீஸார்
இதேபோல், திருச்சி பிரசாரத்தின் போது 650 போலீசாரும், அரியலூரில் 287, பெரம்பலூரில் 480, நாகையில் 410, திருவாரூரில் 413, நாமக்கல்லில் 279 போலீசாரும் பாதுகாப்பில் இருந்தனர். கரூரில் இபிஎஸ் அதே இடத்தில் பிரசாரம் செய்தபோது 137 போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும், அங்கு கூட்டம் கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும் ஏடிஜிபி சுட்டிக்காட்டினார்.
பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டதை அறிந்த காவல்துறை உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்தது. கல்வீச்சு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. விஜய்யின் வருகை தாமதமும் நெரிசலுக்கு ஒரு காரணம். தவுட்டுப்பாளையத்தில் இருந்து கரூர் ரவுண்டானா வர 2 மணிநேரமும், நாமக்கல் பிரசாரத்தில் 4 மணிநேரமும் தாமதமானதால் காத்திருந்தோருக்கு 'ஹீட் ஸ்டிரோக்' ஏற்பட்டது.
ஒரு மணி நேரம்
விஜய், மாலை 4:15 மணிக்கு தவுட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பி, 6 மணிக்கு கரூர் ரவுண்டானா வந்தார். மக்களைப் பார்த்து கையசைத்துவிட்டு மீண்டும் வாகனத்திற்குள் சென்றார். இதனால், அவரைப் பார்க்க ஆர்வம் அதிகரித்து, கூட்டம் வாகனத்தைப் பின்தொடர்ந்தது.
நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் ஆனது. விஜய்யைப் பார்க்க கூட்டம் இரு பக்கமும் நகர்ந்தபோதுதான் விபத்து நடந்ததென்றும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் டேவிட்சன் விளக்கமளித்திருந்தார்.
தற்போது தவெக தலைவர் விஜய் , சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில் தமிழகத்தின் ஆயுதப்படை டிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதமும் சிபிஐ முன் ஆஜராகியுள்ளது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications