"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதத்திற்கு அதிகமாக நல்ல நிலையில் இருப்பதாகவே மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும், இந்த 7% என்பதில் ஏதோ சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், கள நிலவரம் வேறு விதமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவொரு பெரிய முதலீடுகளும் வரவில்லை என்பதே அவரது வாதமாக இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருப்பதாகவே மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், பொருளாதார வல்லுநர்கள் இது குறித்து சந்தேகம் கிளப்புகிறார்கள். பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் பெரிய முதலீடுகள் ஏன் இந்தியாவுக்கு வருவதில்லை என்பதே அவர்கள் கேள்வியாக இருக்கிறது.

Raghuram Rajan Raghuram Rajan on Indian economy

ரகுராம் ராஜன்

இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியா டுடே ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நம்பர் ஒரு பக்கம் இருந்தாலும் கள நிலவரம் வேறாக இருப்பதாக அவர் எச்சரிக்கிறார். இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் மேலாக வளர்ந்து வருகிறது என்றால், ஏன் பெரிய நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கவோ அல்லது முதலீடு செய்யவோ முன்வரவில்லை? என்பது ராஜனின் முதல் கேள்வி.

தப்பா இருக்கு

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும்போது, நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்.. அதனால் அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த அதிக முதலீடு செய்வார்கள். ஆனால் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக கார்ப்பரேட் முதலீடுகள் மந்தமாகவே உள்ளன. "ஏதோ ஒன்று சரியாக இல்லை" என்று அவர் குறிப்பிடுகிறார். அரசு சொல்லும் வளர்ச்சி எண்கள், மக்களின் வாங்கும் சக்தியையோ அல்லது நிறுவனங்களின் நம்பிக்கையையோ பிரதிபலிக்கவில்லை என்பது அவர் கருத்து.

அவர் மேலும் கூறுகையில், "அதிகாரப்பூர்வ நம்பர் காட்டும் வளர்ச்சியை விட, உண்மையான வளர்ச்சி குறைவாக இருக்கலாம் என்பதே எனது சந்தேகம். இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்குவது ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக உள்ளன. கார்ப்பரேட் முதலீடுகள் ஏன் அதிகரிக்கவில்லை என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு புதிராக இருந்தது, இன்றும் அது புதிராகவே இருக்கிறது. மக்கள் வாங்கும் திறன் குறைவாக இருப்பதால், நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கத் தயங்குகின்றன. இதுவே வளர்ச்சி எண்கள் உண்மையை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

முதலீடுகள் இல்லை

வெளிநாட்டு நேரடி முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது. அவர்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளைக் கட்ட ரெடியாக இல்லை.. அதேபோல், பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதையே காட்டுகிறது.

2047க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான சரியான பாதை இன்னும் வகுக்கப்படவில்லை.. 2047ல் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற இலக்கைத் தவிர, இந்தியாவின் பொருளாதார பார்வை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம்? வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறோம்? மனித வளத்தில் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம்? இதில் எதுவுமே தெளிவாக இல்லை.

ஆபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் இந்தியாவிற்குப் பெரும் ஆபத்தாக முடியும் என்று. எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் பலவீனங்களை வெளிப்படுத்தும். சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, அரசு தனது கஜானாவிலிருந்து பணத்தைச் செலவழித்து நுகர்வோரைப் பாதுகாக்க முடியாது. அப்படிச் செய்தால் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்குச் செலவிட வேண்டிய பணம் வீணாகும்.

என்னைக் கேட்டால் எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது மெதுவாகச் சுமத்த வேண்டும் என்பது அவரது கருத்து.. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால், அதை நுகர்வோருக்குக் கடத்தித்தான் ஆக வேண்டும். ஒரே அடியாக உயர்த்தாமல், சிறுக சிறுக விலையை உயர்த்த வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்கள் தேவையைச் சரிசெய்து கொள்வார்கள். மானியங்களை ஏழை எளிய மக்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

என்ன செய்ய வேண்டும்

இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பேசிய அவர், "முதலில் பொருளாதாரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். முதலீடுகளை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வணிகச் சூழலை மேம்படுத்தவும் புதிய சீர்திருத்தங்கள் தேவை. அனைத்தையும் மொத்தமாக மாற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+