சக்தி காந்த தாஸ்க்கு அடித்த ஜாக்பாட்..மாஜி ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மோடி வழங்கிய முக்கிய பொறுப்பு!
டெல்லி: நம்நாட்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ்க்கு பிரதமர் மோடி முக்கிய பதவியை கொடுத்து உள்ளார். தமிழ்நாடு கேடரை சேர்ந்த மாஜி ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் தற்போது பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் - 2 பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக பிகே மிஸ்ரா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு தற்போது முக்கிய பொறுப்பு வழங்கிகப்பட்டுள்ளது.

சக்திகாந்த தாஸ் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் -2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்த நிலையில் பணியாளர் பயிற்சி துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் - 2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மோடி பிரதமராக இருக்கும் வரை அவர் அந்த பொறுப்பில் இருப்பார். இல்லாவிட்டால் இந்த பொறுப்பு தொடர்பாக அடுத்த உத்தரவு வரும்வரை அவர் அதில் நீடிப்பார்.
சக்திகாந்த தாஸ் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 1980ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளில் வகித்து வந்தார். கடந்த 2018 ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு வரை அவர் அந்த பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு ஓய்வு பெற்றார்.
இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பு வகித்த காலத்தில் தான் கொரோனா பாதிப்பு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவை நிகழ்ந்தன. இப்படியான சூழலில் நம்நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் பார்த்து கொண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் சக்திகாந்த் தாஸ் முக்கியமான நபராவார்.
மேலும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகை சார்பில் உலகளவில் முதல் 3 மத்திய வங்கியாளர்களில் ஒருவராக சக்திகாந்த தாஸ் 2 முறை தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டில் குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள் 2024 என்ற பட்டியில் சக்திகாந்த தாஸ்க்கு 'A+' மதிப்பீட்டைவழங்கி இருந்தது.
இந்நிலையில் தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக பணி ஓய்வு பெற்றாலும் கூட சக்தி காந்த தாஸை கைவிடாமல் பிரதமர் மோடி தனது முதன்மை செயலாளர் - 2 பொறுப்பை வழங்கி உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications