முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.. 6 ஆண்டுகளாக கோமாவுடன் போராடியவர்!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82.
பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தவறிவிழுந்த காரணத்தால் தலையில் அடிப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 6 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஜஸ்வந்த் சிங் கடைசி வரை நினைவுத் திரும்பாமலேயே இன்று காலமானார். இவர் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இவர் பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர்.

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் 1996-ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவை வலுப்படுத்தியதில் இவர் முக்கியமான தலைவர். இவர் பாஜகவிலிருந்து 2014-ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டார்.
இவருக்கு அண்மை காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை மறைந்தார். இந்திய ராணுவத்திலிருந்து ஜஸ்வந்த் சிங் ஓய்வு பெற்றவர். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியிருக்கையில் ஜஸ்வந்த் சிங் நம் தேசத்திற்காக முழு விடாமுயற்சியுடன் பணியாற்றினார்.
Jaswant Singh Ji served our nation diligently, first as a soldier and later during his long association with politics. During Atal Ji’s Government, he handled crucial portfolios and left a strong mark in the worlds of finance, defence and external affairs. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
முதலில் அவர் தேசத்திற்காக ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் நீண்ட கால அரசியல்வாதியாகவும் சேவையாற்றியவர். அடல் பிகாரி வாஜ்பாயின் அரசில் அவர் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறையில் சிறந்துவிளங்கினார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் நினைவுக்கூரப்படுவார். பாஜகவை வலுப்படுத்த பெரும் பங்காற்றியவர். அவருடனான உரையாடல்களை நாம் எப்போதும் நினைவில் கொள்வேன். அவருடயை ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications