டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்த விவசாயிகள்... சங்க கொடியேற்றி போராட்டம்!
டெல்லி: டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் சென்று வரும் விவசாயிகள் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டையை வந்தடைந்தனர்.
Recommended Video
ஒரு சில விவசாயிகள் செங்கோட்டையின் கோபுரங்களில் ஏறி கொடியை ஏற்றி உள்ளனர்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணியை திட்டமிட்டபடி விவசாயிகள் தொடங்கினார்கள். சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றனர். இதன் காரணமாக விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.

சிலர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். 7 பஸ்கள் மற்றும் சில போலீஸ் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. டெல்லி முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருவதால் தலைநகர் போர்க்களம்போல் உள்ளது. இந்த் நிலையில் பாதை மாறி டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் சென்று வரும் விவசாயிகள் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டையை வந்தடைந்தனர்.
டெல்லி செங்கோட்டையில் குடியரசு தினம் அன்று வழக்கமாக முப்படை பேரணி நடைபெறும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையை விவசாயிகள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டை முன்பு விவசாயிகள் அணி, அணியாக திரண்டுள்ளனர். அங்கு டிராக்டர்களில் பேரணியாக செல்கின்றனர் .ஒரு சில விவசாயிகள் செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து விவசாயிகள் சங்க கொடியை ஏற்றி உள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications